நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொந்த நிலத்தில் வாழ்பவர்கள் வீட்டிற்கு செல்வதில் சிக்கல்; 48 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வேண்டும்: டத்தோ டாக்டர் கலைவாணர்

ஷாஆலம்:

சொந்த வீட்டிற்கு செல்வதில் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 48 மணி நேரத்திற்குள் தீர்வு கிடைக்க வேண்டும்.

தேசிய விசுவாசப் பேரவைச் செயலகத்தின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை வலியுறுத்தினார்.

கம்போங் ஜாவார் லோட் 3 எனும் இடத்தில் சோமு கருப்பையா குடும்பத்தினர் 35 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

சொந்த நிலத்தில் தான் வீடு அமைந்துள்ளது. வீட்டிற்கான நில வரி உட்பட அனைத்தையும் அவர்கள் முறையாக செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் கேஸ் குழாய்கள் இருப்பதால் திடீரென அவ்வழியை பயன்படுத்த முடியாது.

இதனால் அவ்வழியை தடுப்பு கம்பம் போட்டு பெட்ரோனால் கேஸ் நிறுவனம் பூட்டி விட்டது.

மக்களை பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவ்வாறு செய்யப்பட்டிருந்தாலும் மக்கள் வீடுகளுக்கு செல்ல முறையான சாலை அமைத்து தர வேண்டும்.

அதுவும் பெட்ரோனாஸ் நிறுவனம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

அதையெல்லாம் செய்யாமல் வழியை மூடுவது எந்த விதத்தில் நியாயமாகும்.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் கவுன்சிலர்களும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை.

அதன் அடிப்படையில் தான் ஷாஆலம் மாநகர் மன்றத்தில் மகஜர் ஒன்றை ஒப்படைத்துள்ளோம்.

இப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதற்கான ஆலோசனைகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.

ஆக அடுத்த 48 மணி நேரத்திற்குள் இவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்று டத்தோ டாக்டர் கலைவாணர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset