நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரூ'ராசா வீடுகளை விற்கவோ, வாடகைக்கு விடவோ நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்: அல்-சுல்தான் அப்துல்லா

குவாந்தான்:

ரூ'ராசா எனும் மக்கள் இல்லத்தின் பயனாளிகள் அனைவரும் தங்களது வீடுகளை மற்ற தரப்பினருக்கு ஒருபோதும் விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ கூடாது.

பகாங் மாநில சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதின் இதனை நினைவூட்டியுள்ளார்.

வழங்கப்பட்ட வீடுகள், பயனாளிகள், அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காகவே பிரத்தியேகமாக வழங்கப்படுவதால், அவற்றை விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ முடியாது.

இதை விற்கவோ வாடகைக்கு விடவோ நினைக்காதீர்கள். நான் கூட இதை வாடகைக்கு விட அனுமதிக்க மாட்டேன்.

இது குறிப்பாக உங்கள் அனைவருக்குமானது.

அல்லாஹ் சுபஹானஹு வதஆலா நம்மை அழைத்திருந்தால், அது நமது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கொடுக்கப்படும் (வாரிசாகச் சேர்க்கப்படும்).

இதை விற்கவோ வாடகைக்கு விடவோ முடியாது என்று  தஞ்சோங் லம்பூரில் உள்ள ரூ'ராசா இல்ல வளாகத்தில், குவாந்தான்,  ஜெரன்துட் மாவட்டங்களுக்கான ரூ'ராசா இரண்டாம் கட்டத்தின் சாவி ஒப்படைப்பு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset