செய்திகள் மலேசியா
சுங்கைசோ கம்போங் கொஸ்கான் சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா: அடுத்தாண்டு நடைபெறும்
ரவாங்:
சுங்கைசோ கம்போங் கொஸ்கான் சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா அடுத்தாண்டு கோலாகலமாக நடைபெறும்.
ஆலயத் தலைவர் விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
கம்போங் கொஸ்கான் சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக நடைபெற்றது.
காலை முதல் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சுற்றுவட்டத்தைச் சேர்ந்த மக்கள் திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்தியபிரகாஷ் உட்பட பல பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
சுங்கைசோ கம்போங் கொஸ்கான் சித்தி விநாயகர் ஆலயத்தின் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 80% கட்டுமான பணிகள் தற்போது முடிந்து விட்டன.
அடுத்தாண்டு ஆலயத்தின் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெறும். அதற்கான முயற்சிகளை ஆலய நிர்வாகம் எடுத்து வருகிறது.
ஆக பொதுமக்கள் இவ்விழா வெற்றியடைய ஆதரவாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 10:08 pm
குவாரி பாறையால் நசுக்கப்பட்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் சிவக்குமார் மரணம்
September 14, 2026, 9:34 pm
அரசாங்கம் நிலையாக இருப்பதே முக்கியம் என்பதால் அம்னோ விவகாரத்தில் நான் மிதமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன்: பிரதமர்
September 14, 2026, 9:33 pm
உயர் மதிப்புமிக்க துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த மலேசியாவும் கேரளாவும் முயற்சி
September 14, 2026, 9:32 pm
ஆலய விவகாரங்களில் எழும் மிரட்டல், அழுத்தங்களுக்கு பேரா மாநில அரசு ஒருபோதும் அடிபணியாது: டத்தோ சிவநேசன்
September 14, 2026, 9:31 pm
ஹஜ் செலவைக் குறைக்க முயன்றேன்: ஜமீல் கிர்
September 14, 2026, 4:58 pm
மசூதியில் ஆறு வயது சிறாருக்குப் பாலியல் தொல்லை: மாற்றுத்திறனாளி நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
September 14, 2026, 4:27 pm
