செய்திகள் மலேசியா
ஆலய விவகாரங்களில் எழும் மிரட்டல், அழுத்தங்களுக்கு பேரா மாநில அரசு ஒருபோதும் அடிபணியாது: டத்தோ சிவநேசன்
ஈப்போ:
ஆலய விவகாரங்களில் மிரட்டல் , அழுத்தங்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் பணியாது எனவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் அரசாங்கத்துடன் முறையாகப் பேசி, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தீர்வு காண முன்வர வேண்டும்.
பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தை மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
நான் இருக்கும் வரை அரசாங்கத்தை அந்த வகையில் கட்டுப்படுத்த முயற்சிப்பது நடைபெறாது என அவர் வலியுறுத்தினார்.
ஆலய நிர்வாகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விதிமுறைகளுக்கு உட்பட்ட தீர்வுகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கான நடைமுறைகளை சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என அவர் கூறினார்.
சில இடங்களில் பழமையான வழிபாட்டுத் தலங்கள் மோசமான நிலையில் இருப்பதால், அங்குள்ள சிலைகள் , வழிபாட்டுப் பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
அதே வேளையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட முக்கியமான ஆலயம் ஒன்றை அதன் தற்போதைய இடத்திலிருந்து அகற்றும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாது என டத்தோ சிவநேசன் ஈப்போவில் உள்ள அருள் மிகு விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில்கலந்துக்கொண்டப் பின்னர் இவ்வாறு செய்தியாளர்களுடம் கூறினார்.
மேலும் பேசிய அவர், புந்தோங் காளியம்மன் ஆலயத்திலும் விரைவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறிய அவர், அதனைச் சுற்றியுள்ள மேலும் நான்கு அல்லது ஐந்து ஆலயங்களை ஒருங்கிணைத்து முறையான ஆலய வளாகமாக அமைப்பது தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், பத்துகாஜா நகரில் உள்ள ஐந்து ஆலயங்களையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் சுமார் 3 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
காளியம்மன், விநாயகர், மதுரைவீரன், அம்மன் உள்ளிட்ட ஐந்து ஆலயங்களை ஒரே வளாகத்தில் அமைக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 10:08 pm
குவாரி பாறையால் நசுக்கப்பட்ட லோரியில் சிக்கிய ஓட்டுநர் சிவக்குமார் மரணம்
September 14, 2026, 9:34 pm
அரசாங்கம் நிலையாக இருப்பதே முக்கியம் என்பதால் அம்னோ விவகாரத்தில் நான் மிதமான பாதையைத் தேர்ந்தெடுத்தேன்: பிரதமர்
September 14, 2026, 9:33 pm
உயர் மதிப்புமிக்க துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த மலேசியாவும் கேரளாவும் முயற்சி
September 14, 2026, 9:32 pm
சுங்கைசோ கம்போங் கொஸ்கான் சித்தி விநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா: அடுத்தாண்டு நடைபெறும்
September 14, 2026, 9:31 pm
ஹஜ் செலவைக் குறைக்க முயன்றேன்: ஜமீல் கிர்
September 14, 2026, 4:58 pm
மசூதியில் ஆறு வயது சிறாருக்குப் பாலியல் தொல்லை: மாற்றுத்திறனாளி நபர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்
September 14, 2026, 4:27 pm
