நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்​கப் பாயின்ட் பிளாசா

சென்னை: 

விமான நிலைய வளாகத்​தில் பயணி​கள் வசதிக்​காக ரூ.23 கோடி​யில் அமைக்​கப்​பட்ட பிக்​கப் பாயின்ட் பிளா​சாவை ஒன்றிய விமானப் போக்​கு​வரத்துத்​துறை அமைச்​சர் ராம் மோகன் நாயுடு திறந்து வைத்​தார்.

சென்னை விமான நிலை​யத்​தில் டெர்​மினல் 1-க்கு முன்​பக்​கம், தரை தளத்​தில் ரூ.22.88 கோடி​யில் பயணிகள் வசதிக்​காக பிக்​கப் பாயின்ட் பிளாசா அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இதை ஒன்றிய விமான போக்​கு​வரத்​துத்துறை அமைச்​சர் ராம் மோகன் நாயுடு டெல்​லி​யில் இருந்து காணொலி காட்சி வாயி​லாக நேற்று திறந்து வைத்​தார். 

அப்​போது, அவர் பேசி​ய​தாவது: 

இந்த பிக்​கப் பிளா​சா, பயணி​களின் வசதியை மைய​மாக கொண்டு உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

பயணி​களை அழைத்​துச் செல்​லும் வாக​னங்​களின் இயக்​கத்தை ஒழுங்​குபடுத்​த​வும், டெர்​மினல் முன்​பகு​தி​யில் ஏற்​படும், போக்​கு​வரத்து நெரிசலை குறைக்​க​வும் உதவும். 

டெர்​மினல்​களுக்​கும், பல அடுக்கு வாகன நிறுத்​தும் இடங்​களுக்​கும் இடையே பயணி​கள் எளி​தாக சென்று வரு​வதற்​காக 15 பேட்​டரி வாக​னங்​கள் தொடர்ந்து இயக்​கப்​படும்.

பயணி​களின் வசதிக்​காக பாது​காப்பு சோதனைக்கு பிந்​தைய பகு​தி​யில், நவீன டிராலிகளை வழங்​கு​வதற்​கான பணி​யும் நடக்​கிறது. இந்த நவீன டிராலிகள், பயணி​கள் தங்​களது உடைமை​களு​டன், எளி​தாக நகர உதவுவதுடன், அவர்​களின் நேரத்​தை​யும் மிச்​சப்​படுத்​தும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

5,000 வாடகைக் கார்கள்

சென்னை விமான நிலைய இயக்​குநர் ராஜா கிஷோர் கூறும்​போது, “டெர்​மினல் 1-ல் இருந்து வாடகை காருக்​காக இது​வரை, சுமார் 600 மீட்​டர் தொலை​வில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்​கிங் சென்​று, அதன்​பின்பு லிப்​டில் ஏறி, மேல் தளங்​களுக்கு செல்ல வேண்​டி​யிருந்​தது.

தற்​போது டெர்​மினல் 1-ல் இருந்து சுமார் 30 மீட்​டரிலேயே, பிக்​கப் பாயின்ட் பிளா​சா​வில் டாக்சி வசதி இருப்​ப​தால், முதி​யோர், மாற்​றுத்​திற​னாளி​கள், கர்ப்​பிணி​கள், குழந்​தைகளு​டன் வரும் பயணி​களுக்கு பெரிதும் பயனுள்​ள​தாக இருக்​கும்.

தின​மும் சுமார் 5,000 எல்லோ போர்டு வாடகை கார்​களை, இந்தப் பகு​தி​யில் கையாள முடி​யும். இதன் மூலம் பயணி​களின் சிரமம் குறைவதுடன், விமான நிலைய வாகன போக்​கு​வரத்​தும் ஒழுங்​குபடுத்​தப்​படும். பயணி​களின்​ சேவையை மேம்​படுத்​து​வ​தே எங்​களுக்​கு முக்​கிய நோக்​கம்​ ஆகும்​” என்​றார்​.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகைத் தளத்தில் எப்போதும் குழப்பமான போக்குவரத்து நிலவும். பெரும்பாலும் புதிய பயணிகள் எங்கு செல்வது, எப்படி செல்வது என்று தடுமாறி நிற்பார்கள். அந்த நிலை தொடராது என்று தாம் எதிர்பார்ப்பதாக பயணி ஒருவர் தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset