நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்றிரவு லண்டன் புறப்படுகிறார் 

சென்னை: 

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்றிரவு இங்கிலாந்து தலைநகரமான லண்டனுக்குப் புறப்படுகிறார் 

சென்னையில் இருந்து 'எமிரேட்ஸ்' விமானத்தில் துபாய் செல்லும் முதல்வர், அங்கு ஒருநாள் தங்கி, அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித், தற்போது துபாயில் உள்ளார். இந்த பயணத்தின்போது, அஜித்தை முதல்வர் விஜய் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.

முதல்வரின் பயணம், 10 முதல் 15 நாட்கள் வரை திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஒரு வாரத்திற்குள், சென்னை திரும்ப வாய்ப்பு உள்ளதாக தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் தனது முதல் அலுவல் வெளிநாட்டு பயணமாக முதலமைச்சர் விஜய் லண்டன் செல்கிறார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset