நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தம்பி விஜய்யின் சைகையையும் மிசாவின் கைது குறித்தும் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீட்டு விளக்கம் 

சென்னை: 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் ஜோசப் விஜய் மிசா வழக்கை சுட்டிக்காட்டி தாடை சைகை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அதற்கு பதிலடி தரும் வகையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு தகுந்த விளக்கம் அளித்துள்ளார். 

மிசா சட்டத்தில் தாம் கைது செய்யப்பட்டதும்  தாடை எலும்பு முறிவு உள்ளிட்ட கொடுமைகளையும் விளக்கி, வரலாற்றை மாற்ற முடியாது என வலியுறுத்தி, சட்டமன்ற மரியாதை காக்க முதல்வர் கண்ணியமாக நடக்க வேண்டும் என்றார்.

போராளிகள் எல்லாம் இதை தாண்டிதான் வந்து இருக்கோம். எதிர்த்து போராடறதும்… அதோட விளைவுகள சந்திக்கறதும் எங்களுக்கு ஒண்ணும் புதுசு இல்ல என்று மு.க.ஸ்டாலின் கூறினார். 

தம்பி விஜய் அவர்களே, தமிழ்நாடு சட்டமன்றம் பெரும் மாண்புக்குரிய இடமாகும். அங்கு மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுங்க. 

சட்டமன்றத்துல சட்டம் ஒழுங்கு பிரச்சனை. மக்கள் நல திட்டங்கள்.. தமிழ்நாட்ட மேலும் மேலும் எப்படி முன்னேற்ற பாதைக்கு கொண்டு போறது.. தமிழ்நாட்டோட உரிமைகள எப்படி பாதுகாக்கறது... இதெல்லாம் விவாதம் பண்ணுங்க.. இவ்வாறு மு.க.ஸ்டாலின் வீடியோ பதிவில் குறிப்பிட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset