செய்திகள் தமிழ் தொடர்புகள்
மொரியஷியஸில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு
போர்ட் லூயிஸ்:
மொரிஷியஸ் நாட்டில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டப் பேரவை உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி கலந்துகொண்டுள்ளார்.
அங்கு வாழும் இந்திய - தமிழ்நாட்டு வம்சாவழியினரையும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களையும் அவர் சந்தித்து வருகிறார்.
நேற்று இரவு தைலம்மை (எ) தைலைமை என்ற இந்திய வம்சாவளி தொழிலதிபர் ஏற்பாடு செய்த விருந்தில் அவரும் டாக்டர் சம்பத் அவர்களும் பங்கேற்றனர்.
இதில் அந்த நாட்டின் முக்கிய அமைச்சர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜன் நரசிங்கன், விவசாயம், மீன்வளத்துறை அமைச்சர் அர்வின் பொலில் உள்ளிட்டோரும், மொரிஷியஸை சேர்ந்த தமிழ்நாட்டு பிரமுகர்களும் வந்திருந்தனர்.
மேலும் மாநாட்டுக்கு வருகை தந்திருக்கும் பல்வேறு நாடுகளில் தொழில்புரியும் தமிழ்நாட்டு வம்சாவளி தொழிலதிபர்களும், சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர்.
தமிழகத்தில் உள்ள வர்த்தக வாய்ப்புகள் குறித்து அப்போது தமீம் அன்சாரி எடுத்துரைத்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 13, 2026, 6:16 pm
இடைத்தேர்தல்: அதிமுக பிரச்சாரக் குழுவில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் அணிக்கு இடமில்லை
September 13, 2026, 6:08 pm
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக இடதுசாரிகள் அறிவித்தனர்
September 12, 2026, 10:57 pm
தொடர் விடுமுறையால் திக்குமுக்காடிய சென்னை சாலைகள், பேருந்துகள்
September 11, 2026, 4:29 pm
பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்: அவருக்கு வயது 90
September 10, 2026, 12:11 pm
தம்பி விஜய்யின் சைகையையும் மிசாவின் கைது குறித்தும் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியீட்டு விளக்கம்
September 10, 2026, 10:41 am
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்றிரவு லண்டன் புறப்படுகிறார்
September 9, 2026, 10:04 pm
தவெக தலைமையில் ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ உதயமானது
September 9, 2026, 1:23 pm
