நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா காலமானார்: அவருக்கு வயது 90 

சென்னை: 

தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90 ஆகும்.  

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் திருக்குறளுக்கு உரை எழுதி பிரபலமானார். 

தமிழ்நாடு அரசு சார்பாக கடந்த 2000ஆம் ஆண்டில் சாலமன் பாப்பையாவிற்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது 

தொடர்ந்து தமிழ்மொழி, தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது 

மேலும், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ், சிவாஜி தி பாஸ் திரைப்படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாலமான் பாப்பையா அவர்களின் மறைவிற்குப் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset