நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக இடதுசாரிகள் அறிவித்தனர் 

திருச்சி: 

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சி அமைக்க இடதுசாரிகள் ஆதரவு அளித்த நிலையில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டோடு தனித்து போட்டியென்றும் முடிவு எடுத்துள்ளனர்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் காலி​யாக உள்ள தொகு​தி​களில், மதுராந்​தகம் மற்​றும் தாராபுரம் தொகு​தி​களுக்கு அக்​.6-ம் தேதி இடைத்​தேர்​தல் நடை​பெறவுள்​ளது.

திமுக, அதி​முக, தவெக ஆகிய பிர​தானக் கட்​சிகள் தங்​களது வேட்​பாளர்​களை அறி​வித்துள்​ளன. கூட்​ட​ணிக் கட்​சிகளும் தங்​களது ஆதரவை வெளிப்​படுத்தி வரும் நிலை​யில், இடது​சாரி கட்​சிகளான இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகளின் நிலைப்​பாடு என்ன என்​பது பெரும் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி இருந்தது.

இந்நிலையில், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இத்தொகுதியில் 4 முனைப்போட்டி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடதுசாரிகள் போட்டியிடுவது தேர்தல் களத்தை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது.

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியின் பேசுகையில், “தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுராந்தகம் பற்றி சிபிஎம் மாநிலச் செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.

இந்த இடைத்தேர்தலில் இடதுசாரிகளுக்கு பல்வேறு ஜனநாயக சக்திகளும் ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம். தமிழ் மண்ணில் ஜனநாயகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 60, 70 ஆண்டுகளாக பெரும் பங்களிப்பு செய்திருக்கிறது. சட்டமன்ற நாடாளுமன்ற விழுமியங்கள் எப்போதும் கட்டிக் காத்துள்ளது.

இப்போதுள்ள அரசியல் சூழலில் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று முடிவு செய்துள்ளோம். அதனால் இடதுசாரிகள் தனித்து களம் காண்கிறோம். வேட்பாளர்கள் அறிவிப்பு செப்.15 அன்று இருக்கும்” என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset