நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு

சென்னை:

திருக்குறளை இந்திய மொழிகளில் எளிதாக அணுகும் வகையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் "திருக்குறள் பன்மொழிச்செயலி' (Tirukkural Multilingual) என்ற புதிய செயலியை இன்று புதன்கிழமை வெளியிடுகிறது.

 22 மொழிகளில் வெளியிடப்பட்ட திருக்குறள் மொழிபெயர்ப்புகள் ஒரே டிஜிட்டல் தளத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒரே குறளைத் தமிழ் உள்ளிட்ட வெவ்வேறு இந்திய மொழிகளில் ஒரே திரையில் ஒப்பிட்டுப் படிக்க முடியும்.

மேலும், திருக்குறளின் 1,330 குறட்பாக்களுக்கும் தமிழ் சிறப்புரை, ஆங்கில உரைநடை, சொல் இலக்கண விளக்கம், ஒவ்வொரு அடியின் யாப்பமைப்பு உள்ளிட்ட ஆய்வு மற்றும் கற்றல் வளங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன. முதல் 100 அதிகாரங்களில் இடம்பெறும் குறட்பாக்களுக்குத் தொடர்புடைய ஓலைச்சுவடி வரிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

அறிதிறன்பேசியில் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, இணைய வசதி இல்லாமலும் செயல்படும். முற்றிலும் இலவசமாகவும், விளம்பரங்களின்றியும் வழங்கப்படும் இச்செயலியின் உள்ளடக்கங்கள் பொதுப் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. 

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset