நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தொடர் விடுமுறையால் திக்குமுக்காடிய சென்னை சாலைகள், பேருந்துகள்

சென்னை: 

தொடர் விடுமுறை எதிரொலியாக பேருந்து, கார் என சென்னையிலிருந்து ஒட்டுமொத்தமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்தனர். 

இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இன்று அதிகாலை வரை நீடித்ததால் சென்னை திக்குமுக்காடியது.

வெளிமாநில, மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை தேடி சென்னைக்கு வருகை தருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனால் மக்கள் தொகையின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. 

குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து சென்னையில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். 

அதுவும் தற்போது சாலை போக்குவரத்து மேம்படுத்தப்பட்டுள்ளதால், இரண்டு நாட்களுக்கு மேல் விடுமுறை என்றால் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு விடுகின்றனர்.

இந்த நிலையில், சனி, ஞாயிறு, திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி என 3 நாள் தொடர் விடுமுறை வருகிறது. 

இதை முன்னிட்டு, சென்னை, புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று மாலை முதல் படையெடுத்தனர். 

இதனால், சென்னையின் முக்கிய சாலைகள், பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

குறிப்பாக பல்லாவரம் முதல் வண்டலூர் வரையிலான ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து சென்றன. திரும்பிய இடமெல்லாம் போக்குவரத்து நெரிசல் தான். 

அவசரமாக மருத்துவமனைகளுக்கு செல்லக்கூடியவர்கள் கூட தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset