செய்திகள் உலகம்
ராயல் கிங்ஸ் குழுமத்தின் மக்கள் தொடர்பு மூத்த மேலாளர் கேரி ஹாரிஸ் 'சமூகத்தில் விரைந்து உதவுவோருக்கான விருது’ பெற்றார்
சிங்கப்பூர்:
ராயல் கிங்ஸ் குழுமத்தின் மக்கள் தொடர்பு மூத்த மேலாளரான கேரி ஹாரிஸ், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் இரண்டாவது பிரிவுத் தளபதி கர்னல் சர் பூன் ஹுய்யிடமிருந்து விருது பெற்றார்.
விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியதன் தொடர்பில் முஹம்மது ஹாரிஸ் கேரிக்கு ‘சமூகத்தில் விரைந்து உதவுவோருக்கான விருது’ வழங்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை வழங்கிவரும் இந்த விருது, தன்னலமற்ற துணிச்சல், விவேகம், பொதுநலச் சிந்தனை போன்ற பண்புகளை வெளிப்படுத்தும் குடிமக்களை அங்கீகரிக்கிறது.
கடந்த மாதம் அப்பர் சாங்கி ரோட்டில் தமது வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த முஹம்மது ஹாரிஸ், காயமடைந்து காணப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு முதலுதவி அளித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
விருது கிடைத்ததில் தாம் மகிழ்ச்சி அடைவதாக ஹாரிஸ் கூறினார்.
“விபத்தில் பாதிக்கப்படுவோர்க்கு நான் மனமுவந்து உதவி அவர்களது வேதனையைப் போக்க முற்படுவேன்,” என்று ராயஸ் கிங்ஸ் குழுமத்தின் மூத்த மக்கள் தொடர்பு மேலாளராகப் பணிபுரியும் ஹாரிஸ் கூறினார்.
விருது பெற்றதற்காக ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் தாம் பெருமை அடைவதாக ராயல் கிங்ஸ் குழுமத் தலைவர் சிராஜுதீன் தெரிவித்தார்.
“ஹாரிசின் துணிச்சல், அறிவுக்கூர்மை, பரிவு, சமூகக் கடப்பாடு ஆகியவற்றை இந்த விருது பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.
தினமும் நான் சாலையில் பயணிக்கும்போதோ அல்லது வெளியே செல்லும்போதோ, யாரேனும் விபத்து அல்லது சாலை விபத்தில் சிக்கிக்கொண்டால், உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறை (Police Command Center), SCDF, போக்குவரத்துப் பிரிவு செயல்பாட்டு அறை, LTA-வின் அதிவேகச் சாலை கண்காணிப்பு, ஆலோசனை அமைப்பு (EMAS) ஆகியவற்றுக்குத் தகவல் தெரிவிப்பேன். முதலுதவி (First Aid), AED பயன்பாடு, உளவியல் ரீதியான முதலுதவி ஆகியவற்றில் பயிற்சி பெற்றவனாகவும், தகுதிவாய்ந்த தீயணைப்புப் பாதுகாப்பு மேலாளராகவும் (Fire Safety Manager) இருப்பதால், ஒருவர் உணர்வற்று மயக்க நிலையில் இருந்து, இயல்பாகச் சுவாசிக்காதபோது நான் உடனடியாக CPR (இதய-நுரையீரல் மீளுயிர் சிகிச்சை) அளிப்பேன்.
சில சமயங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்குக் காயங்கள் இருந்தால், காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வரும் வரை அவர்களின் வலியைக் குறைக்க முதலுதவி அளிப்பேன். பயிற்சி பெற்ற 'சமூக முதலுதவி அளிப்பவராக' (Community First Responder) நான் இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன் என்றார் ஹாரிஸ்.
அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரும் எனது துணிச்சல் மற்றும் சமூக அக்கறைக்காக SCDF அமைப்பால் நான் பலமுறை அங்கீகரிக்கப்பட்டுள்ளேன்.
2024 நவம்பர் 25 மற்றும் 2026 ஆகஸ்ட் 20 ஆகிய தேதிகளில், சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையின் (SCDF) 2-வது பிரிவின் தளபதி கர்னல் செர் பூன் ஹுய் (COL Ser Boon Hui), டம்பினீஸ் தீயணைப்பு நிலையம், 2-ஆவது பிரிவு தலைமையகத்தில் எனக்கு 'சமூக முதலுதவி அளிப்பவர் விருது' (Community First Responder Award) வழங்கி கௌரவித்தது எனக்கு பெரும் ஊக்கம் அளித்துள்ளது என்று கேரி ஹாரிஸ் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
இஸ்லாமியச் சமயக் கல்விக்கு செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தலாமா?
September 10, 2026, 8:26 am
உலகிலேயே அதிக சம்பளம் பெறும் சிங்கப்பூர் பிரதமர்
September 10, 2026, 8:00 am
மீண்டும் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: 100 டாலரை தாண்டியது
September 9, 2026, 10:14 pm
அமெரிக்கவாழ் இந்துக்கள் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டாம் என்று இந்து அமைப்புகள் அறிவுரை
September 8, 2026, 9:33 pm
கிசுகிசுக்களின் ராணி: அக்கம் பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
September 6, 2026, 4:27 pm
