செய்திகள் உலகம்
இந்து சமயக் குழுவினரின் வருகைக்காக Eiffel கோபுரத்தில் பெண் ஊழியர்களை வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்
பாரிஸ்:
ஈஃபல் கோபுரம் (Eiffel Tower) ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மூடப்பட்டுள்ளது.
இந்து சமயக் குழுவினரின் வருகையின்போது அங்கிருந்து பெண் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா குழுவினரின் (Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha) வருகையின்போது பெண் ஊழியர்கள் வேறு இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
குழுவினர் இருக்கும் சில பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பெண் ஊழியர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
இந்து சமயக் குழு வந்த போது பெண்களுக்குப் பதில் ஆண் ஊழியர்கள் பொறுப்பில் வைக்கப்பட்டனர்.
பெண்களுடனான தொடர்பு முடிந்த அளவு குறைவாக இருக்கும் வகையில் வருகையை ஏற்பாடு செய்யுமாறு அந்தக் குழு கேட்டுக்கொண்டதாக ஐஃபல் கோபுரத்தை நிர்வகிக்கும் SETE நிறுவனம் கூறியது.
ஆனால் குழுவின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கக்கூடாது என்று அது சொன்னது.
ஆண், பெண் சமத்துவத்தை அது வலியுறுத்தியது.
விசாரணை நடத்தப்படும் என்று பாரிஸ் நகரின் மேயர் தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) கட்சிக்கு நெருக்கமான அந்தக் குழு, பிரான்ஸில் பெரிய அளவில் கட்டப்பட்ட முதல் கோயிலின் திறப்பு விழாவிற்காக அந்நாட்டிற்குச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 9:33 pm
கிசுகிசுக்களின் ராணி: அக்கம் பக்கத்து வீட்டு ரகசியங்களை விற்று 2 வீடுகள் வாங்கிய கொலம்பிய பெண்
September 6, 2026, 4:27 pm
ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா தாக்குதல்கள் தீவிரப்படுத்தி உள்ளது
September 5, 2026, 5:18 pm
பங்களாதேஷில் தட்டம்மையால் உயரும் மரண எண்ணிக்கை
September 5, 2026, 2:50 pm
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காத்துவா எரிமலை மீண்டும் வெடிப்பு: சுனாமி ஆபத்து இல்லை எனத் தகவல்
September 5, 2026, 11:38 am
ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணையாக மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை
September 4, 2026, 9:43 pm
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
