நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு

டாக்கா: 

வங்கதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரம் குறையாமல் பரவி வரும் தட்டம்மை நோய் பாதிப்பால், கடந்த மாா்ச் மாதம் முதல் இதுவரை 999 போ் உயிரிழந்துள்ளனா்.

நோய்வாய்ப்பட்ட பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனைகளில் தொடா்ந்து அனுமதிக்கப்பட்டு வருவதால், படுக்கை வசதி மற்றும் மருத்துவப் பற்றாக்குறை ஏற்பட்டு வங்கதேசத்தின் ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பும் திணறி வருகிறது.

தட்டம்மை பரவலுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சலும் தீவிரமடைந்துள்ளதால், வங்கதேச மருத்துவமனைகள் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் 45,000-க்கும் மேற்பட்டோா் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Bangladesh fights world's worst measles outbreak as vaccination gaps fuel  spread - The Economic Times

டாக்காவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் முழுமையாக நிரம்பிவிட்டதால், நோயாளிகளுக்குத் தரையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தட்டம்மை நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான 1.8 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் அவசரகாலத் திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset