நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மீண்டும் உச்சம் தொட்ட கச்சா எண்ணெய் விலை: 100 டாலரை தாண்டியது

ரியாத்: 

ஈ​ரான்​-அமெரிக்கா போர், சவுதி அரேபியா மீதான ஹவுதி போராளர்​களின் தாக்​குதல் காரண​மாக ஒரு பேரல் கச்சா எண்​ணெய் விலை மீண்​டும் 100 டாலரை தாண்டி உள்​ளது.

மத்​திய கிழக்​கில் தீவிர மடைந்து வரும் ஈரான்​-அமெரிக்கா இடையே​யான நேரடி ராணுவ மோதலும், அதன் நீட்​சியாக சவுதி அரேபி​யா​வின் முக்​கிய எண்​ணெய் உற்​பத்​தித் தளங்​கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி போராளிகள் நடத்​தி​யுள்ள அதிரடித் தாக்​குதல்​களும் உலகள​வில் பெரும் போர்ப் பதற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளன.

இந்த தாக்​குதல்​களின் எதிரொலி​யாக, சர்​வ​தேச சந்​தை​யில் கடந்த ஜூலை மாதத்​துக்​குப் பிறகு ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்​ணெய் விலை நேற்று மீண்​டும் 100 டாலரைத் தாண்டியது.

பின்​னர் அது சற்று குறைந்து ஒரு பேரலுக்கு 99.90 டால​ராக சரிந்​தா​லும், மத்​திய கிழக்​கில் புதிய பதற்​றங்​கள் உரு​வா​னால் விலை மீண்​டும் அதி​கரிக்​கும் அபா​யம் உள்​ளது. ஈரான்​-அமெரிக்கா போர் தொடங்​கிய​திலிருந்து எண்​ணெய் விலை ஏற்ற இறக்​கத்​துடன் இருந்து வரு​கின்​றன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset