நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா தாக்குதல்கள் தீவிரப்படுத்தி உள்ளது

டெஹ்ரான்:

ஈரானைச் சுற்றிய கடற்பகுதிகளில் அமெரிக்கப் படைகள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தின.

ஈரானின் மூன்று எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியதாக அமெரிக்க மத்திய ராணுவத் தலைமையகம் தெரிவித்தது.

அவற்றில் ஒன்று கார்க் தீவுக்கு (Kharg Island) அருகே தாக்கப்பட்டது.

அப்பகுதி ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நடுவத்திற்கு அருகில் உள்ளது.

முன்னதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவல் படை (IRGC) இரண்டு அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் மீது ஏவுகணைகளைப் பாய்ச்சியது.

அதற்குப் பதிலடியாக எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியது.

“எங்கள் இரண்டு கப்பல்களைத் தாக்கினால், உங்களின் மூன்று கப்பல்களை அழித்து அதிகப் பொருளியல் இழப்பை ஏற்படுத்துவோம்,” என்று அமெரிக்க மத்திய ராணுவத் தலைமையகத் தலைவர் பிராட் கூப்பர் (Brad Cooper) கூறினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset