செய்திகள் மலேசியா
மலேசியாவின் முன்னோடி இந்திய முஸ்லிம் பாட்காஸ்டாக (podcast) 'தி மாமு ஷோ' (The Mamu Show): விரைவில் எதிர்பாருங்கள்
கோலாலம்பூர்:
மலேசியாவின் முதல் இந்திய முஸ்லிம் பாட்காஸ்ட்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்படுவதில் பெருமை கொள்ளும், ஒரு முன்னோடி டிஜிட்டல் ஒலிபரப்பு முயற்சியான 'தி மாமு ஷோ'-வின் (The Mamu Show) தொடக்கத்துடன் இன்று ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
'ஓம்பாக் எக்ஸ்க்ளூசிவ்' (Ombak Exclusive) நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சி "ஆன்மா & சலாம்: நம்பிக்கை, அடையாளம், கலாச்சாரம், விருப்பங்கள் - அனைத்தும் ஒன்றிணைந்த 'உம்மா' (சமூகம்) எனும் உணர்வு" (Soul & Salam: Faith, Identity, Culture, Aspirations Together As One Ummah) என்ற குறிக்கோள் வாசகத்தைக் கொண்டுள்ளது.
நம்பிக்கை, அடையாளம், கலாச்சாரம், சமூகத்தின் விருப்பங்கள் தொடர்பான தலைப்புகளை ஆராய்வதற்கென இது உருவாக்கப்பட்டுள்ளதாக இதன் நடத்துனர்களில் ஒருவரான அப்துல் ராசிக் ஃபாரித் கலிபுல்லாஹ் கூறினார்.
நவீன மலேசிய சமூகச் சூழலில், இந்திய முஸ்லிம் சமூகம் முக்கியமான விவகாரங்களைப் பற்றி விவாதிக்கவும், தங்கள் பாரம்பரியத்தைக் கொண்டாடவும், அர்த்தமுள்ள உரையாடல்களை வளர்க்கவும் ஒரு மதிப்புமிக்க தளமாகச் செயல்படுவதே 'தி மாமு ஷோ'-வின் முக்கிய நோக்கமாகும் என்று நிகழ்ச்சியின் நெறியாளர் நஜீப் நம்பிக்கையிடம் கூறினார்.
'தி மாமு ஷோ'-வின் முதல் அத்தியாயம் மிகவும் சிறப்பானதாக அமைந்தது; ஏனெனில், 'முக்மின்' (Mukmin) அமைப்பின் தலைவரான டத்தோ வீரா ஷாகுல் தாவூத் (Datuk Wira Shahul Dawood) இதனைத் தொடங்கி வைத்தார். இத்தொடரின் பொருத்தமான தொடக்கமாக, டத்தோ வீரா ஷாகுல் தாவூத் இதன் முதல் விருந்தினராகவும் பங்கேற்று நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
'தி மாமு ஷோ'-வின் நிறுவனர் முஹம்மது நஜீப் கலிஃபுல்லா (Muhammad Najib Kalifullah) தொகுத்து வழங்கிய இந்த விவாதம், ஆழமான கருத்துக்களையும் வலுவான கருத்துப் பரிமாற்றங்களையும் கொண்டிருந்தது. மலேசியாவில் இச் சமூகத்தின் அடையாளம், அதன் எதிர்காலப் பாதை குறித்து ஆழமாக ஆராயும் வகையில், நஜீப் தனது முதல் விருந்தினரிடம் பல்வேறு வினாக்களை முன்வைத்தார்.
இந்த உரையாடல் பின்வரும் முக்கிய விவகாரங்களை ஆராய்ந்தது:
1. 'முக்மின்' (Mukmin) அமைப்பு என்றால் என்ன? மற்ற அரசு சாரா அமைப்புகளுடன் (NGOs) ஒப்பிடுகையில் இந்திய முஸ்லிம் சமூகத்திற்குள் அது வகிக்கும் தனித்துவமான பங்கு என்ன?
2. டத்தோ வீரா ஷாகுல் தாவூத், 'முக்மின்' அமைப்பு ஆகியவை ஏன் கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கு முக்கிய முன்னுரிமை அளித்துள்ளன?
3. ஒற்றுமை குறித்த அவரது தனிப்பட்ட கோட்பாடு என்ன? மேலும், ஒரு ஒருங்கிணைந்த சமூகத்தை எவ்வாறு கட்டமைக்க முடியும்?
4. சமூகப் பணிகள், சமூக சேவையில் அவர் காட்டும் தீவிர அர்ப்பணிப்புக்கும் முயற்சிகளுக்கும் பின்னால் உள்ள உந்துதல்கள் என்ன?
5. தலைமைத்துவம் குறித்த வெளிப்படையான கருத்துக்கள்: விமர்சனங்களை அவர் எவ்வாறு கையாளுகிறார்? பயம், இடர் (risk), தடை குறித்த அவரது கண்ணோட்டம் என்ன?

இந்த நேர்காணல் நிகழ்ச்சி, சமூகத்தின் முக்கியத் தலைவர்களின் சிந்தனைகள், கோட்பாடுகள் குறித்த வெளிப்படையான, ஆழமான தனிப்பட்ட பார்வையை வழங்குவதோடு, ஒளிவுமறைவற்ற உரையாடலுக்கான ஒரு முன்னுதாரணத்தையும் அமைக்கிறது.
'தி மாமு ஷோ'-வை அறிமுகப்படுத்துவதிலும், மலேசிய டிஜிட்டல் தளத்திற்கு ஒரு புதிய, அர்ப்பணிப்புள்ள குரலைக் கொண்டு வருவதிலும் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம்." "இந்த பாட்காஸ்ட் வெறும் ஒலி வடிவம் மட்டுமல்ல; இது இந்திய முஸ்லிம் சமூகம் பிரச்சினைக முன்னெடுப்பதற்கும், கதைகளைப் பகிர்வதற்கும், நமது கடந்த காலத்துடனும் எதிர்காலத்துடனும் இணைவதற்கும் ஒரு முக்கிய தளமாகும்," என்று "தி மாமு ஷோ"வின் நிறுவனர் முஹம்மது நஜிப் கலிஃபுல்லா கூறினார்.
"டத்தோ வீரா ஷாகுல் தாவூத் போன்ற உயர்ந்த அந்தஸ்து கொண்ட தலைவரை எங்கள் முதல் விருந்தினராகக் கொண்டிருப்பது, சாராம்சம் நிறைந்த உள்ளடக்கத்தை உருவாக்குவதில் எங்கள் சமூக அர்ப்பணிப்பை காட்டுகிறது" ராசிக் கூறினார்.
முதல் நிகழ்ச்சி, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதிகள், இணைப்புகளுக்காக, முக்கிய பாட்காஸ்டிங் தளங்கள், சமூக ஊடக சேனல்களைக் கேட்போர் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்துப் புதுப்பிப்புகளுக்கும் எங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடரவும்.
"தி மாமு ஷோ" என்பது மலேசியாவின் முன்னோடியான இந்திய முஸ்லிம் பாட்காஸ்ட்களில் ஒன்றாகும், இது ஓம்பாக் எக்ஸ்க்ளூசிவ் மூலம் இயக்கப்படுகிறது. இது 'ஆன்மா & சலாம்' என்ற கருப்பொருளின் கீழ் நம்பிக்கை, அடையாளம், கலாச்சாரம், விருப்பங்கள் போன்ற கருப்பொருள்களை ஆராய்கிறது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 5:21 pm
தபோங் ஹாஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார்
September 10, 2026, 5:20 pm
அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு அம்னோ மூத்த தலைவர்கள் கைதா? MACC தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் மறுப்பு
September 10, 2026, 3:43 pm
முன்னாள் மனைவியின் ஆபாச வீடியோக்களை புதிய கணவருக்கு அனுப்பிய ஆடவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம்
September 10, 2026, 3:42 pm
நஜிப்பின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு மறக்கவில்லை; நீதி, கருணையின் கதவு திறக்க பிரார்த்திக்கும்: நோராய்னி
September 10, 2026, 3:41 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம்: அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை
September 10, 2026, 3:37 pm
அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாக முன்னாள் தலைமை மேலாளர் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பு
September 10, 2026, 3:25 pm
நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் ஒத்துழைப்பு தற்காலிகமானதே: ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கருத்து
September 10, 2026, 3:16 pm
