நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தபோங் ஹாஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார் 

கோலாலம்பூர்: 

தபோங் ஹாஜி தொடர்பான விசாரணையில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்படவுள்ளது 

இந்நிலையில் அவர் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது 

முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிராக செப்டம்பர் 14ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் என்று எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் கூறினார். 

முன்னாள் அமைச்சருக்கு எதிராக மொத்தம் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைக்க எம்.ஏ.சி.சி  பரிந்துரைத்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் குற்றவியல் சட்டத்தின் 403ஆவது பிரிவின் கீழ், சொத்தை மோசடியாக அல்லது நேர்மையற்ற முறையில் பயன்படுத்திய குற்றம் தொடர்பானவையாகும் என அப்துல் ஹலிம் அமான் தெரிவித்தார்.

இதனிடையே, தபோங் ஹாஜியின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

2014 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தபோங் ஹாஜியின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகளை அந்த அறிக்கை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset