செய்திகள் மலேசியா
சரவாக் லாங் லெல்லாங் ஹெலிகாப்டர் விபத்து; மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்: மலேசிய மருத்துவ சங்கம்
ஈப்போ:
சரவாக் லாங் லெல்லாங்கில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 5 சுகாதார பணியாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய மருத்துவ சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.
உள்நாட்டு தொலைதூர பகுதிகளுக்கு மருத்துவ சேவை செல்லும் போதே இந்த சோகம் நேர்ந்துள்ளது.
2022 முதல் மருத்துவ விமானம், ஆம்புலன்ஸ் விபத்துகள் தொடர்வதாக சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தான் தொடர்ந்து ,மலேசிய மருத்ததுவ சங்கத்தின் சார்பில் அதன் தேசியத் தலைவர் டாக்டர் ஆர். திருநாவக்கரசு முக்கிய கோரிக்கைகளை இவ்வாறு தெரிவித்தார்.
மருத்துவ பணியாளர்களை ஏற்றிச் செல்லும் விமானம், ஆம்புலன்ஸ், படகு அனைத்தும் சுயாதீன பாதுகாப்பு சோதனைக்கு பின்னரே பயன்படுத்தப்பட வேண்டும்.
குறைந்த விலையை மட்டும் அடிப்படையாக கொள்ளாமல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் அரசு நிதியில் தனிநபர் விபத்து, பயண காப்பீடு கட்டாயம் வழங்கவேண்டும்
முழு சுகாதார போக்குவரத்து அமைப்பையும் ஆய்வு செய்ய பல்துறை பணிக்குழு அமைக்க வேண்டும்.
பணியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அவசரகால பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
"லாங் லெல்லாங் சோகம் மீண்டும் நிகழக்கூடாது. இது ஒரு மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமைய வேண்டும்" என முன் வைத்த கோரிக்கையில் அடங்கும் என்றார்
ஈப்போவில் தேசிய மருத்துவ சங்க மாநாடு 2026 ஈப்போவில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்குப் பின்னர் இவ்வாறு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
இம்மாநாட்டுடன், மலேசிய மருத்துவ சங்கத்தின் 66ஆவது ஆண்டு பொதுக்கூட்டமும் இணைந்து நடைபெற்றது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 10, 2026, 5:21 pm
தபோங் ஹாஜி ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார்
September 10, 2026, 5:20 pm
அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு அம்னோ மூத்த தலைவர்கள் கைதா? MACC தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் மறுப்பு
September 10, 2026, 3:43 pm
முன்னாள் மனைவியின் ஆபாச வீடியோக்களை புதிய கணவருக்கு அனுப்பிய ஆடவருக்கு 30,000 ரிங்கிட் அபராதம்
September 10, 2026, 3:42 pm
நஜிப்பின் சேவைகளை அம்னோ மகளிர் பிரிவு மறக்கவில்லை; நீதி, கருணையின் கதவு திறக்க பிரார்த்திக்கும்: நோராய்னி
September 10, 2026, 3:41 pm
மலாக்கா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணியுடன் ஒத்துழைக்க வேண்டாம்: அம்னோ இளைஞர் பிரிவு கோரிக்கை
September 10, 2026, 3:37 pm
அதிகார துஷ்பிரயோகம் புரிந்ததாக முன்னாள் தலைமை மேலாளர் இரு நாட்களுக்கு நீதிமன்ற காவலில் வைப்பு
September 10, 2026, 3:25 pm
நம்பிக்கை கூட்டணி - அம்னோ அரசியல் ஒத்துழைப்பு தற்காலிகமானதே: ஜொகூர் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் கருத்து
September 10, 2026, 3:16 pm
நெகிரி செம்பிலான் மந்திரி பெசாரைச் சந்திக்கிறார் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி
September 10, 2026, 3:05 pm
