நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ பொதுப்பேரவைக்குப் பிறகு அம்னோ மூத்த தலைவர்கள் கைதா? MACC தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் மறுப்பு 

புத்ராஜெயா: 

2026 அம்னோவின் பொதுப்பேரவை முடிந்த பிறகு அம்னோ கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இருப்பினும், கைது நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் கூறினார். 

தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்துவதோ அல்லது கைது செய்வதோ தங்களுக்குக் கிடைத்துள்ள விசாரணை பட்டியலில் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். 

 ஆதாரமற்ற செய்திகளை முதலில் எம்.ஏ.சி.சியுடன் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

முன்னதாக,அம்னோவின் உயர் பதவி வகிக்கும் தலைவர் ஒருவர், 2026 PAU முடிவடைந்தவுடன் எம்.ஏ.சி.சி யால் அழைக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset