செய்திகள் உலகம்
பங்களாதேஷில் தட்டம்மையால் உயரும் மரண எண்ணிக்கை
டாக்கா:
பங்களாதேஷில் தட்டம்மை நோயால் மாண்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.
மார்ச் முதல் குறைந்தது 986 பிள்ளைகள் மாண்டனர்.
மொத்தம் 180 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் ஏற்பட்டுள்ளது அல்லது அறிகுறிகள் உள்ளன.
நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகின்றன.
கடந்த பல ஆண்டுகளில் பங்களாதேஷ் சந்திக்கும் ஆக மோசமான தட்டம்மை நோய்ப்பரவல் இது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரையிலான பிள்ளைகள்.
பல குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஊட்டச்சத்துக் குறைபாடும் சேர்ந்து அவர்களின் உடலை மேலும் பலவீனப்படுத்துகிறது.
தட்டம்மை இருமல், தும்மல் மூலம் மிக எளிதாகப் பரவும்.
மூளையில் வீக்கம், கடுமையான மூச்சுப் பிரச்சினைகளையும் அது ஏற்படுத்தலாம்.
நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடப்படுகிறது. ஆயினும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 2:50 pm
இந்தோனேசியாவில் அனாக் கிரக்காத்துவா எரிமலை மீண்டும் வெடிப்பு: சுனாமி ஆபத்து இல்லை எனத் தகவல்
September 5, 2026, 11:38 am
ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணையாக மாற்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை
September 4, 2026, 9:43 pm
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
நேப்பாள வெள்ள பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 3, 2026, 5:43 pm
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு
September 2, 2026, 4:25 pm
மலேசியர்கள், இனி தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்: புதிய சட்டம் அமலாகிறது
August 31, 2026, 8:03 pm
