செய்திகள் உலகம்
காதல் வலையில் சிக்கி அந்தரங்க ஆபாசப் படங்களை எடுக்காதீர்கள்: மோசடிகள் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் காவல்துறை எச்சரிக்கை
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் அந்தரங்க ஆபாசப் படங்களை வைத்து மிரட்டும் மோசடிகள் அதிகரித்துள்ளதாகக் காவல்துறை கூறியுள்ளது.
கடந்த மாதம் மட்டும் குறைந்தது 52 புகார்கள் பதிவாகியுள்ளன.
இந்த மோசடியில் 134,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
பெரும்பாலான சம்பவங்களில் மோசடிக்காரர்கள் இணைதேடும் செயலிகள் அல்லது சமூக ஊடகம் வழி தொடர்புக்கொள்கின்றனர்.
அவர்கள் பின்னர் உரையாடல் செயலிகளில் பேச அழைப்பார்கள்.
அதில் நடத்தப்படும் ஆபாசக் காணொலி அழைப்புகள், பகிரப்படும் ஆபாசப் படங்களை மோசடிக்காரர்கள் பதிவுசெய்து வைத்திருப்பார்கள்.
பணம் கொடுக்கவில்லையென்றால் அவற்றை வெளியிடப்போவதாக மிரட்டுவார்கள்.
பாதிக்கப்பட்டோர் பணம் கொடுத்தபிறகும் மிரட்டல் பெரும்பாலும் தொடர்வதாக அதிகாரிகள் கூறினர்.
இணையத்தில் சிறிதுகாலம் மட்டுமே பழகியவர்களுடன் நெருக்கமாக இருக்கவேண்டாம் என்று சிங்கப்பூர் காவல்துறை ஆலோசனை கூறியுள்ளது. காதல் வயப்பட்டு உங்கள் அந்தரங்கங்களை இணையத்தில் காட்டி ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 9:43 pm
நேபாள வெள்ளத்தை 2 மாதங்கள் முன்பே கணித்த கிறிஸ்தவ பாதிரியார்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 12:35 pm
நேப்பாள வெள்ள பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 3, 2026, 5:43 pm
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு
September 2, 2026, 4:25 pm
மலேசியர்கள், இனி தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்: புதிய சட்டம் அமலாகிறது
August 31, 2026, 8:03 pm
Grand Canyon தேசியப் பூங்காவில் வெள்ளம் ஒருவர் மரணம், 15 பேர் காணவில்லை
August 30, 2026, 5:06 pm
தக்காளியால் சிவந்த சாலைகள்: தக்காளிச் சண்டையில் 20,000 பேர்
August 30, 2026, 10:07 am
ஜொகூர் நீரிணையில் முழுமையாக ஆளில்லாக் கப்பல்கள் சுற்றுக்காவலில் ஈடுபடுத்தப்படும்: சிங்கப்பூர் அறிவிப்பு
August 29, 2026, 4:48 pm
