நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2.24 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள போதைப்பொருளுடன் மலேசிய பெண் இந்திய விமான நிலையத்தில் கைது

புதுடில்லி:

கடந்த வெள்ளிக்கிழமை 2.24 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 15 கிலோவுக்கும் அதிகமான  கஞ்சா வகை போதைப் பொருளை கொண்டு சென்ற மலேசிய பெண் இந்தியாவில் கைது செய்யப்பட்டார்.

பயணிகளின் அடையாள சரிபார்ப்பு செயல்முறை மூலம் அடையாளம் காணப்படுவதற்கு முன்பு, கோலாலம்பூரிலிருந்து புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 3க்கு அந்தப் பெண் வந்ததாக புதுடில்லி சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, பச்சை வழித்தடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ​​சுங்க அதிகாரிகள் அவரை சோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டனர்.

அவர் எடுத்துச் சென்ற பயணப் பெட்டியை சோதனையிட்டபோது, ​​கஞ்சா என சந்தேகிக்கப்படும் 30 பிளாஸ்டிக் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

சந்தேகத்திற்கிடமான கஞ்சாவின் நிகர எடை 15,015.5 கிராம் ஆகும். அதன் மதிப்பிடப்பட்ட சந்தை மதிப்பு  2.24 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் மற்றும் வயதை இந்திய அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

மேலும்  இந்திய அதிகாரிகள் தொடர் விசாரணைகளை இன்னும் நடத்தி வருகின்றனர் என சுங்கத்துறை தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset