நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக் மாநிலம் சூப்பர் எல்-நினோவை எதிர்கொள்ள தயார்: மந்திரி பெசார் டத்தோ சராணி முஹம்மத் தகவல் 

ஈப்போ: 

கடந்த மே 14ஆம் தேதி தொடங்கிய சூப்பர் எல் நினோ (Super El Nino) இயற்கை நிகழ்வின் தாக்கம் 2027ஆம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதன் பாதிப்புகளைச் சமாளிக்கப் தொடர்புடைய அரசு முகமைகள் மூலம் பேராக் மாநில அரசு தனது தயார்நிலையை தீவிரப்படுத்தியுள்ளது.

மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு, மலேசிய வானிலை ஆய்வு மையம், நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS) மற்றும் பேராக் நீர் வாரியம் ஆகியவை தற்போதைய வானிலை முன்னறிவிப்புகளையும் முக்கிய அணைகளின் நீர்மட்டத்தையும் தொடர்ச்சியாகக் கண்காணித்து அறிக்கையளித்து வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரானி முகமட் தெரிவித்துள்ளார்.

நீர் விநியோகம், விவசாயம், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் சூப்பர் எல் நினோ ஏற்படுத்தும் தாக்கங்களை எதிர்கொள்ள மாநில அரசு வைத்துள்ள விரிவான செயல் திட்டம் குறித்து, போத்தா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நஜிஹத்துஸாலேஹா அகமத் கேட்ட கேள்விக்கு சாரானி பதிலளித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset