செய்திகள் மலேசியா
பெர்கேசோவின் 24 மணி நேர பாதுகாப்பு திட்டத்தை தனியார் காப்புறுதிகளுடன் ஒப்பிட வேண்டாம்: டத்தோஶ்ரீ அஸ்மான்
அம்பாங்:
பெர்கேசோவின் 24 மணி நேர பாதுகாப்பு திட்டத்தை தனியார் காப்புறுதிகளுடன் ஒப்பிட வேண்டாம் என்று பெர்கேசோவின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஹம்மது அஸ்மான் அஜிஸ் முஹம்மது வலியுறுத்தினார்.
நாட்டில் உள்ள தொழிலாளர்களில் மொத்தம் 8.5 மில்லியன் அதாவது 87.6 சதவீதம் பேர், பெர்கேசோவின் 24 மணி நேர பாதுகாப்புத் திட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இது, பணி நேரத்திற்குப் பிறகான சமூகப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதை நிரூபிக்கிறது.
மேலும் கிட்டத்தட்ட 12 சதவீதம் தொழிலாளர்கள் பெர்கேசோவின் 24 மணி நேர பாதுகாப்புத் திட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கு பல காரணங்கள் கூறலாம்.
காப்புறுதி வேறு, சமூக பாதுகாப்பு வேறு என்பதில் அனைவரும் தெளிவாக இருக்க வேண்டும் என்று அவர் நினைவுறுத்தினார்.
பெர்கேசோ 24 மணி நேர பாதுகாப்புத் திட்டத்தில் பங்கேற்காத மொத்தத் தொழிலாளர்களில், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயாவில் உள்ள பணியாளர்கள் 53 சதவீதத்தினராகவும், அதைத் தொடர்ந்து ஜோகூர் 11 சதவீதமாகவும், பினாங்கு ஒன்பது சதவீதமாகவும் பங்களித்ததாக தரவுகள் காட்டுகின்றன.
ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான, இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களில், ஒரு நாளைக்குச் சராசரியாக 69 வழக்குகள் வீதம், மொத்தம் 6,330 கோரிக்கைகளை பெர்கேசோ பெற்றது.
இக் கோரிக்கைகளுக்கு மொத்தமாக 9.97 மில்லியன் ரிங்கிட் இழப்பீடுகள் வழங்கப்பட்டன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 2:44 pm
அஸிஸ் நாளை வரை போலிஸ் காவலில் இருப்பார்
September 9, 2026, 2:42 pm
இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு விமானி கைது
September 9, 2026, 1:56 pm
நஜிப்பின் கருணை மனு குறித்து இந்த வாரம் மன்னிப்பு வாரியம் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 9, 2026, 12:45 pm
பேராக் மாநிலம் சூப்பர் எல்-நினோவை எதிர்கொள்ள தயார்: மந்திரி பெசார் டத்தோ சராணி முஹம்மத் தகவல்
September 9, 2026, 12:31 pm
ஊத்தான் மெலிந்தாங்கில் புதிய கிளினிக்; ஜனவரியில் கட்டுமானப் பணி தொடக்கம்: வசந்தி
September 9, 2026, 12:13 pm
