செய்திகள் மலேசியா
செப்டம்பர் 13 அன்று கிளானா ஜெயா வழித்தடத்தில் ரேபிட் கேஎல் தண்டவாள மாற்றுப் பணிகளைத் தொடங்குகிறது: ரேபிட் கேஎல் அறிவிப்பு
கிளானா ஜெயா:
ஞாயிற்றுக்கிழமை முதல் கெலானா ஜெயா வழித்தடத்தில் ரேபிட் கேஎல் கட்டம் கட்டமாக தண்டவாள மாற்றுப் பணிகளைத் தொடங்குகிறது. இதனால், குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமைகளில் பாதிக்கப்பட்ட நிலையங்களில் சேவை தொடங்கும் நேரம் காலை 6 மணிக்கு பதிலாக காலை 9.30 மணிக்கு மாற்றியமைக்கப்படும்.
ஏழு கட்டங்களாக நடைபெற்று, செப்டம்பர் 2027-க்குள் நிறைவடையும் இப்பணிகளில், உள்கட்டமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக விரிவான தண்டவாள, பராமரிப்புப் புதுப்பிப்புகள் அடங்கும்.
இந்தக் காலகட்டங்களில், பாதிக்கப்பட்ட நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு இயந்திரங்கள் காலை 9.30 மணி வரை செயல்படாது, ஆனால் கவுன்டர்களில் பயணச்சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
மேலும், பயணிகளுக்கு உதவுவதற்காக இலவசப் பேருந்துகள் இயக்கப்படும்.
பயணிகள் myRapid அல்லது ரேபிட் கேஎல்-இன் சமூக ஊடகத் தளங்கள் மூலம் புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு ரேபிட் கேஎல் அறிவுறுத்துகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 12:45 pm
பேராக் மாநிலம் சூப்பர் எல்-நினோவை எதிர்கொள்ள தயார்: மந்திரி பெசார் டத்தோ சராணி முஹம்மத் தகவல்
September 9, 2026, 12:31 pm
ஊத்தான் மெலிந்தாங்கில் புதிய கிளினிக்; ஜனவரியில் கட்டுமானப் பணி தொடக்கம்: வசந்தி
September 9, 2026, 12:13 pm
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் வருகையால் தமிழக முதலமைச்சர் விஜய்யின் இங்கிலாந்து பயணம் தள்ளிவைப்பு?
September 9, 2026, 11:58 am
துவாங்கு முஹ்ரிஸை பதவி நீக்கம் செய்ய விரும்புவதாக ஜாஹித் கூறியது உண்மைக்கு புறம்பானது: மந்திரி புசார்
September 9, 2026, 10:52 am
ரொம்பினில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி, ஒருவர் காயம்
September 8, 2026, 9:38 pm
