நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் புதிய சிற்றுண்டி கட்டுமானத்திற்கு லீ அறவாரியம் 200,000 ரிங்கிட் நிதியுதவி: அருள்குமார்

சிரம்பான்:

சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் புதிய சிற்றுண்டி கட்டுமானத்திற்கு லீ அறவாரியம் 200,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளது.

நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார் இதனை கூறினார்.

சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் மாணவர்களின் பயன்பாட்டிற்காக புதிய திறந்தவெளி மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு அடுத்ததாக இருமாடி கேன்டீன் கட்டும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுமார் 700 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பள்ளியில், மாணவர்களின் பல்வேறு இணைப்பாட நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புதிய திறந்தவெளி மண்டபம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

அதேபோன்று மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பெரிய அளவிலான சிற்றுண்டி தேவைப்படுகிறது.

இதனால் இருமாடி சிற்றுண்டி கட்டுவதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுச் செலவு சுமார் 1.2 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

இதில் 50 சதவீதமான 600,000 ரிங்கிட் செலவை ஜேஎப் நட்சத்திரக் குழுமம் ஏற்றுக் கொண்டுள்ளது. 

மீதமுள்ள 600,000 ரிங்கிச் தொகையை பள்ளி வாரியக் குழுவும் பள்ளி நிர்வாகமும் திரட்ட வேண்டிய நிலையில், இதுவரை சுமார் 200,000 ரிங்கிட் நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோனி லோக் அவர்களின் முயற்சியின் மூலம், லீ அறவாரியம் சார்பில் மேலும் 200,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதிக்கான காசோலை இன்று பள்ளி வாரியக் குழுத் தலைவர் காளிதாசனிடம் வழங்கப்பட்டது.

இந்த நிதியுதவி, இருமாடி சிற்றுண்டி கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதில் மிகப்பெரிய பங்களிப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி,  இணைப்பாட நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் லீ அறவாரியத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இந்த உதவி பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு நிச்சயமாக வலுவான அடித்தளமாக அமையும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset