செய்திகள் மலேசியா
அஸிஸ் நாளை வரை போலிஸ் காவலில் இருப்பார்
கோலாலம்பூர்:
தாபோங் ஹாஜியின் முன்னாள் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹீம், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420இன் கீழ் நடைபெறும் விசாரணைகளுக்கு உதவுவதற்காக, அவருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு நாள் நீதிமன்றக் காவல் உத்தரவைத் தொடர்ந்து நாளை வரை போலிஸ் காவலில் இருப்பார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் கீழ் உள்ள குற்றச்சாட்டு தொடர்பாக, 60 வயதான அப்துல் அஸிஸுக்கு இரண்டு உள்ளூர் ஜாமீன்தாரர்களுடன் 450,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும்,
அவர் இந்த நீதிமன்றக் காவல் உத்தரவுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது என்று அவரது வழக்கறிஞர் டத்தோ அமர் ஹம்சா அர்ஷாத் கூறினார்.
காவல் உத்தரவு முடியும் வரை அவர் போலீஸ் காவலில் இருப்பார், அதன் பிறகு அவர் விடுவிக்கப்படலாம்.
எனவே, நாளை காவல் காலம் முடிவடையும் போது, காவல் உத்தரவு நீட்டிக்கப்படாவிட்டால், அவர் வீட்டிற்குச் செல்லலாம் என்று அவர் கூறினார்.
வழக்கறிஞர்களான டத்தோ அபு பக்கர் ஈசா ராமாத், அசோக் அதிமுலன் ஆகியோருடன் அப்துல் அஸிஸுக்காக வாதாடும் அமர் ஹம்ஸா, ஜாமீன் பணம் இன்று செலுத்தப்படும் என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 2:43 pm
பெர்கேசோவின் 24 மணி நேர பாதுகாப்பு திட்டத்தை தனியார் காப்புறுதிகளுடன் ஒப்பிட வேண்டாம்: டத்தோஶ்ரீ அஸ்மான்
September 9, 2026, 2:42 pm
இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு விமானி கைது
September 9, 2026, 1:56 pm
நஜிப்பின் கருணை மனு குறித்து இந்த வாரம் மன்னிப்பு வாரியம் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 9, 2026, 12:45 pm
பேராக் மாநிலம் சூப்பர் எல்-நினோவை எதிர்கொள்ள தயார்: மந்திரி பெசார் டத்தோ சராணி முஹம்மத் தகவல்
September 9, 2026, 12:31 pm
ஊத்தான் மெலிந்தாங்கில் புதிய கிளினிக்; ஜனவரியில் கட்டுமானப் பணி தொடக்கம்: வசந்தி
September 9, 2026, 12:13 pm
