செய்திகள் மலேசியா
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மன்னிப்பு விண்ணப்பம் இவ்வாரத்தில் கலந்தோசிக்கப்படுகிறதா ?
கோலாலம்பூர்:
நாட்டின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மன்னிப்பு குறித்த விண்ணப்பத்தை கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் இந்த வாரத்தில் கலந்தோசிக்கும் என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நஜிப் ரசாக்கின் விவகாரம் குறித்து அதன் உறுப்பினர்கள் கலந்தாலோசிப்பார்கள்.
இருப்பினும், இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படுமா அல்லது விண்ணப்பம் குறித்து வெறுமனே விவாதிக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
முன்னதாக ஊழல் வழக்குகளில் குற்றவாளி என்ற நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட எவரும் கட்டாயமாக சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணி ஓர் அறிக்கையின் வாயிலாக கேட்டு கொண்டது
டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் பெயரை நம்பிக்கை கூட்டணி பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
72 வயதான நஜிப், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு SRC இன்டர்நேஷனல் நிதியிலிருந்து 42 மில்லியன் ரிங்கிட் கையாடல் செய்த குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார்.
அவருக்கு 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும், 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர் 2022 ஆகஸ்ட் 23 அன்று காஜாங் சிறையில் அந்தத் தண்டனையை அனுபவிக்கத் தொடங்கினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 3:33 pm
சபாவில் லாரி, கார் மோதி கொடூர விபத்து: நால்வர் பரிதாபமாக பலி
September 9, 2026, 2:44 pm
அஸிஸ் நாளை வரை போலிஸ் காவலில் இருப்பார்
September 9, 2026, 2:43 pm
பெர்கேசோவின் 24 மணி நேர பாதுகாப்பு திட்டத்தை தனியார் காப்புறுதிகளுடன் ஒப்பிட வேண்டாம்: டத்தோஶ்ரீ அஸ்மான்
September 9, 2026, 2:42 pm
இந்தோனேசியாவிற்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு விமானி கைது
September 9, 2026, 1:56 pm
நஜிப்பின் கருணை மனு குறித்து இந்த வாரம் மன்னிப்பு வாரியம் விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
September 9, 2026, 12:45 pm
பேராக் மாநிலம் சூப்பர் எல்-நினோவை எதிர்கொள்ள தயார்: மந்திரி பெசார் டத்தோ சராணி முஹம்மத் தகவல்
September 9, 2026, 12:31 pm
