செய்திகள் மலேசியா
ஊத்தான் மெலிந்தாங்கில் புதிய கிளினிக்; ஜனவரியில் கட்டுமானப் பணி தொடக்கம்: வசந்தி
ஊத்தான் மெலிந்தாங்:
ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான புதிய கிளினிக் அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் வசந்தி சின்னசாமி தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது ஊத்தான் மெலிந்தாங் பகுதியில் உள்ள கிளினிக்கில் போதிய வசதிகள் இல்லை.
புதிய கிளினிக் அல்லது மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் பல்வேறு புகார்களை முன்வைத்ததாக அவர் கூறினார்.
இதன் அடிப்படையில், தனது தேர்தல் அறிக்கையிலும் புதிய கிளினிக் அமைக்கும் திட்டத்தை முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இது தொடர்பாக பரிந்துரை முன்வைக்கப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஊத்தான் மெலிந்தாங்கில் புதிய கிளினிக் அமைக்கும் திட்டம் இடம்பெற்றதாக வசந்தி சின்னசாமி கூறினார்.
இதற்கிடையில், திட்டத்துக்கான நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் நிதி தொடர்பான செயல்முறைகளால் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
புதிய கிளினிக் கட்டப்படும் வரை மக்கள் தற்போதுள்ள கிளினிக்கில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
எனவே, புதிய கிளினிக் வருவதற்கு முன்பாகவே மக்களுக்கு தேவையான சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சி செய்தேன் என்றார்.
அதன்படி, புதிய ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், கிளினிக்கின் காத்திருப்பு பகுதியில் கூடாரம், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், கிளினிக்கிற்குச் செல்லும் சாலைகள் பழுதடைந்திருந்த இடங்களில் சாலை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, உத்தான் மெலிந்தாங்கில. புதிய கிளினிக் அமைக்கும் திட்டம் தொடர்பாக மகிழ்ச்சியான தகவல் கிடைத்ததாக வசந்தி சின்னசாமி கூறினார்.
அதன்படி, அக்டோபர் மாதத்தில் டெண்டர் சமர்ப்பிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்து, ஜனவரி மாதத்தில் எஸ்எஸ்டி நடைமுறை மூலம் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என அவர் தெரிவித்தார்.
இத்தனை காலம் காத்திருந்த மக்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாகும். ஜனவரி மாதம் முதல் கட்டுமானப் பணிகள் தொடங்கும். ஊத்தான் மெலிந்தாங் மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த மருத்துவ வசதி இனி கிடைக்கப் போகிறது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 12:45 pm
பேராக் மாநிலம் சூப்பர் எல்-நினோவை எதிர்கொள்ள தயார்: மந்திரி பெசார் டத்தோ சராணி முஹம்மத் தகவல்
September 9, 2026, 12:13 pm
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் வருகையால் தமிழக முதலமைச்சர் விஜய்யின் இங்கிலாந்து பயணம் தள்ளிவைப்பு?
September 9, 2026, 11:58 am
துவாங்கு முஹ்ரிஸை பதவி நீக்கம் செய்ய விரும்புவதாக ஜாஹித் கூறியது உண்மைக்கு புறம்பானது: மந்திரி புசார்
September 9, 2026, 10:52 am
ரொம்பினில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி, ஒருவர் காயம்
September 8, 2026, 9:38 pm
ஹெலிகாப்டர் விபத்து: டாக்டர் ஐனுல் மரணத்தை குடும்பத்தினர் உறுதி செய்தனர்
September 8, 2026, 9:21 pm
