செய்திகள் மலேசியா
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் வருகையால் தமிழக முதலமைச்சர் விஜய்யின் இங்கிலாந்து பயணம் தள்ளிவைப்பு?
சென்னை:
தமிழக முதலமைச்சர் விஜய் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இங்கிலாந்து செல்ல விஜய் திட்டமிட்டிருந்தார்.
வரும் 10ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இங்கிலாந்தில் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துரைப்பதுடன், புதிய முதலீடுகளை ஈர்க்கும் பணிகளையும் ஒப்பந்தங்களையும் நேரில் கண்காணிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டிருந்தார்.
இதனிடையே, வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தலைநகர் டுல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
இதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பங்கேற்க உள்ளார்.
பிரிக்ஸ் மாநாட்டிற்குப்பின் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் சென்னை வருவதால் அவரை சந்திப்பதை முதலமைச்சர் விஜய் தவிர்ப்பது சரியாக இருக்காது என கவர்னர் அர்லேகர் தரப்பில் அறுவுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை வரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்திக்கும் வகையில் முதலமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 12:31 pm
ஊத்தான் மெலிந்தாங்கில் புதிய கிளினிக்; ஜனவரியில் கட்டுமானப் பணி தொடக்கம்: வசந்தி
September 9, 2026, 11:58 am
துவாங்கு முஹ்ரிஸை பதவி நீக்கம் செய்ய விரும்புவதாக ஜாஹித் கூறியது உண்மைக்கு புறம்பானது: மந்திரி புசார்
September 9, 2026, 10:52 am
ரொம்பினில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி, ஒருவர் காயம்
September 8, 2026, 9:38 pm
ஹெலிகாப்டர் விபத்து: டாக்டர் ஐனுல் மரணத்தை குடும்பத்தினர் உறுதி செய்தனர்
September 8, 2026, 9:21 pm
அஜிஸ் ரஹீம் மீது நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது
September 8, 2026, 9:16 pm
