நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேலை நேரத்திற்குப் பின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து 8.5 மில்லியன் ஊழியர்கள் பெர்கேசோவின் 24 மணி நேரப் பாதுகாப்பு திட்டத்தில் தொடர்ந்து பங்கேற்கின்றனர்: டத்தோஸ்ரீ அஸ்மான்

அம்பாங்:

நாட்டில் 8.5 மில்லியன் அல்லது 87.6 சதவீத ஊழியர்கள் பெர்கேசோவின் 24 மணி நேரப் பாதுகாப்பு தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.

இது வேலை நேரத்திற்குப் பிறகும் சமூகப் பாதுகாப்பு இருப்பதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கிறது.

எந்த நேரத்திலும் ஏற்படக்கூடிய விபத்துகளின் அபாயத்தை எதிர்கொள்வதற்கு, வேலை நேரத்திற்கு வெளியேயும் பாதுகாப்பை நீட்டிப்பதன் முக்கியத்துவத்தில் பெரும்பாலான ஊழியர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த எண்ணிக்கை பிரதிபலிக்கிறது.

பெர்கேசோவின் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜிஸ் முகமது இதனை கூறினார்.

கடந்த  ஜூன் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேரப் பாதுகாப்பு, வேலை நேரத்திற்கு வெளியேயும் உட்பட, வேலை சம்பந்தமில்லாத விபத்துக்களை சந்திக்கும் ஊழியர்களுக்குப் பாதுகாப்பை நீட்டிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இன்னும் தெளிவாகச் சொல்வதானால், மலேசியாவில் ஒரு முறைசார் துறை ஊழியர், வேலைக்குச் சென்று வருவதற்கான பயண நேரம் உட்பட, ஒரு வருடத்தில் தனது நேரத்தின் சுமார் 33 சதவீதத்தை மட்டுமே வேலைக்காகச் செலவிடுகிறார்.

இதன் பொருள், மீதமுள்ள 67 சதவீதம், அதாவது வருடத்திற்கு சுமார் 244 நாட்கள், வேலை நேரத்திற்கு வெளியே விபத்து ஏற்பட்டால் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

அதே நேரத்தில், அந்த காலகட்டத்தில் ஒரு நபர் தனக்கும் தனது குடும்பத்திற்கும் பொறுப்புகளைக் கொண்ட ஒரு ஊழியராகவே இருக்கிறார் என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 3,500 ரிங்கிட்டுக்கும் குறைவாக சம்பாதிக்கும் தொழிலாளர்களில் 52 சதவீதம் பேர், லிண்டுங 24 ஜாம் திட்டத்தில் பங்கேற்க விரும்பாத தொழிலாளர்களின் மிகப்பெரிய குழுவாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும்  பேங்க் நெகாரா மலேசியா தெரிவித்தபடி, இந்தக் குழுவில் உள்ள பெரும்பான்மையானவர்களுக்குக் காப்பீட்டுப் பாதுகாப்பு இல்லாததால் இந்த நிலைமை மிகவும் கவலையளிப்பதாக அவர் கூறினார்.

இந்த நிலைமை அவர்களை அதிக ஆபத்துள்ள குழுவாக ஆக்குகிறது.

வேலை நேரத்திற்கு வெளியே அவர்களுக்கு துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் ஏற்பட்டால், அவர்கள் நிதி அதிர்ச்சிகளால் பாதிக்கப்படுவார்கள்

பேங்க் நெகாராவின் 2024 தரவுகளின்படி, மலேசியர்களில் 45.5 சதவீதம் பேர் மட்டுமே ஆயுள் காப்பீடு பெற்றுள்ளனர்.

மேலும், பி40 பிரிவினரிடையே பங்கேற்பு விகிதம் மிகவும் குறைவாக, சுமார் 4 சதவீதமாக உள்ளது.

மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், 24 மணி நேர பாதுகாப்பு திட்டத்தில் பங்கேற்க விரும்பாத மிகப்பெரிய குழுவினர், பெரும்பாலும் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா மாநிலங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் 53 சதவீதத்தைக் கொண்டுள்ளனர்.
அதே சமயம், 11 சதவீதம் பேர் ஜொகூரையும், 9 சதவீதம் பேர் பினாங்கையும், மீதமுள்ள 27 சதவீதம் பேர் மற்ற மாநிலங்களையும் சேர்ந்தவர்கள்.

கேள்விக்குட்பட்ட மாநிலங்கள் அதிக மக்கள் மிகவும் துடிப்பான, ஆற்றல்மிக்க பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

அதே நேரத்தில் இது அவர்களை விபத்துகளின் மிக அதிக ஆபத்திற்கு உள்ளாக்குகிறது என்று அஸ்மான் கூறினார்.

24 மணி நேர திட்டத்தின் செயலாக்கத்தின் முதல் மூன்று மாதங்களில், அதாவது 1 ஜூன் முதல் 31 ஆகஸ்ட் 2026 வரை, பெர்கேசோவால் மொத்தம் 6,330 கோரிக்கைகள் பெறப்பட்டன. இது ஒரு நாளைக்குச் சராசரியாக சுமார் 69 வழக்குகள் ஆகும்.

அந்தத் தொகையில், வழங்கப்பட்ட மொத்தப் பலன் கொடுப்பனவுகளின் அளவு 9.97 மில்லியனை ரிங்கிட்டை எட்டியது.

இந்தக் கொடுப்பனவு, தற்காலிக ஊனமுற்றோர் நலன்கள், நிரந்தர ஊனமுற்றோர் நலன்கள், மருத்துவச் செலவுத் திருப்பிச் செலுத்துதல், இறுதிச் சடங்கு மேலாண்மை நலன்கள், சார்ந்தோர் நலன்கள், அத்துடன் மறுவாழ்வுக் கருவிகள் மற்றும் உள்வைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நலன்களை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset