செய்திகள் மலேசியா
ஹெலிகாப்டர் விபத்து: டாக்டர் ஐனுல் மரணத்தை குடும்பத்தினர் உறுதி செய்தனர்
கோத்தாபாரு:
சுகாதார அமைச்சு அவரது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய டாக்டர் ஐனுல் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தது.
இன்று மாலை சரவாக்கின் மருடியில் உள்ள உலு பாராமில் உள்ள லாங் லெல்லாங் விமான நிலையப் பகுதியில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததாகக் கூறப்படும் ஹெலிகாப்டரில் இருந்த ஐந்து நபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட 32 வயதான டாக்டர் ஐனுல் பரோவா கமரூடினின் மைத்துனரான நூரீஸ் முகமது பௌசி இதை உறுதிப்படுத்தினார்.
மாலை சுமார் 4 மணியளவில், டாக்டர் ஐனுல் பரோவாவின் கணவரான 37 வயது முஹம்மது ஃபைஸ் அப்துல் மாலிக்கிற்கு சுகாதார அமைச்சு அழைப்பு விடுத்தது.
அதன் பிறகு அவர் கிளந்தானில் உள்ள தனது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்ததாக அவர் கூறினார்.
எங்கள் குடும்பம் நாளை அதிகாலையில் சரவாக்கிற்குப் புறப்படுவதற்கு முன்பு, கோலாலம்பூர் செல்வதற்காக தற்போது இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தில் உள்ளது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 9:21 pm
அஜிஸ் ரஹீம் மீது நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது
September 8, 2026, 9:16 pm
பினாங்கு சர்வதேச விமான நிலையம் புகைமூட்டத்தால் பாதிக்கப்படவில்லை
September 8, 2026, 5:48 pm
சரவாக்கில் 5 பேர் பயணித்த பறக்கும் மருத்துவர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது
September 8, 2026, 4:35 pm
பரபரப்பான பணிகளுக்கு மத்தியில் கோமாலி தோட்ட மக்களின் குரல்களை துணையமைச்சர் யுனேஸ்வரன் கேட்டறிந்தார்
September 8, 2026, 4:35 pm
செப்டம்பர் 19 என்பது பழம் கனிந்து பழுக்கும் நாள்; பழம் விழுவதற்காக காத்திருக்கிறோம்: அப்துல் ரவுஃப்
September 8, 2026, 4:33 pm
துன் ரசாக்கின் 3சி எச்சரிக்கைகளை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் நினைவூட்டினார்
September 8, 2026, 2:55 pm
