செய்திகள் மலேசியா
ரொம்பினில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி, ஒருவர் காயம்
ரொம்பின்:
குவாந்தான்-ஜொகூர் பாரு சாலையின் 134வது கிலோமீட்டரில் நேற்றிரவு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்; மேலும் ஒருவர் காயமடைந்தார்.
நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ரோம்பின் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஷரீஃப் ஷாய் ஷரீஃப் மொண்டோய் தெரிவித்தார்.
காரை ஓட்டிச் சென்ற 27 வயதான ஆர். விஜய், ரொம்பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரின் பின் இருக்கையில் இருந்த 17 வயதான பி. விஜயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முன் இருக்கையில் அமர்ந்திருந்த 16 வயதான எம். தனுஷ் குமார் எனும் சிறுவன் உடல் காயங்களுடன் தப்பினார்.
மூவரும் ரொம்பினில் இருந்து குவாந்தான் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறச் சாலையோரத்திலிருந்த மரத்தில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஓட்டுநரின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் எனப் போலிசார் முதற்கட்ட விசாரணையில் கணித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ரொம்பின் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 11:58 am
துவாங்கு முஹ்ரிஸை பதவி நீக்கம் செய்ய விரும்புவதாக ஜாஹித் கூறியது உண்மைக்கு புறம்பானது: மந்திரி புசார்
September 8, 2026, 9:38 pm
ஹெலிகாப்டர் விபத்து: டாக்டர் ஐனுல் மரணத்தை குடும்பத்தினர் உறுதி செய்தனர்
September 8, 2026, 9:21 pm
அஜிஸ் ரஹீம் மீது நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது
September 8, 2026, 9:16 pm
பினாங்கு சர்வதேச விமான நிலையம் புகைமூட்டத்தால் பாதிக்கப்படவில்லை
September 8, 2026, 5:48 pm
