செய்திகள் மலேசியா
தபோங் ஹாஜி வாரியத்தில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குற்றச்சாட்டு: முன்னாள் தலைவர் அப்துல் அஸிஸ் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
கோலாலம்பூர்:
தபோங் ஹாஜி வாரியத்தின் தலைவராக இருந்தபோது தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியது தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் அப்துல் அஸிஸ் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது
இருப்பினும் தனக்கு எதிரான அனைத்து குற்றங்களையும் மறுத்து அவர் விசாரணை கோரினார்.
60 வயதான அப்துல் அஸிஸ், நீதிபதி அஸுரா அல்வி முன்னிலையில் இக்குற்றச்சாட்டை மறுப்பதாக வாக்குமூலம் அளித்தார்.
புத்ராஜெயா பெர்டானாவின் வாரியத்தில் தபோங் ஹாஜியின் பிரதிநிதியாக தம்மை பரிந்துரைக்கும்படி அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட்டதாக அப்துல் அஸிஸ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நியமனத்தின் மூலம் அவருக்கு ஆண்டு ஊதியமாக RM690,000 மற்றும் BMW 7 சீரிஸ் காரைப் பயன்படுத்தும் சலுகையும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், தமக்கு ஆதாயம் இருந்த புத்ராஜெயா பெர்டானா நிறுவனத்தில் RM193.5 மில்லியன் வரை முதலீடு செய்ய தபோங் ஹாஜியின் இயக்குநர்கள் வாரியத்தைச் செல்வாக்கு செலுத்தி ஒப்புதல் பெறச் செய்தார் என்றும் அப்துல் அஸிஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009இன் பிரிவு 23(1)இன் கீழ் கொண்டுவரப்பட்டு, அதே சட்டத்தின் பிரிவு 24(1-இன் கீழ் தண்டனைக்குரியதாக வரையறுக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பெறப்பட்ட லஞ்சத் தொகையைப் போல் ஐந்து மடங்கு அல்லது அத்தொகை அபராதமாகவும் விதிக்கப்படலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 12:13 pm
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் வருகையால் தமிழக முதலமைச்சர் விஜய்யின் இங்கிலாந்து பயணம் தள்ளிவைப்பு?
September 9, 2026, 11:58 am
துவாங்கு முஹ்ரிஸை பதவி நீக்கம் செய்ய விரும்புவதாக ஜாஹித் கூறியது உண்மைக்கு புறம்பானது: மந்திரி புசார்
September 9, 2026, 10:52 am
ரொம்பினில் கார் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி, ஒருவர் காயம்
September 8, 2026, 9:38 pm
ஹெலிகாப்டர் விபத்து: டாக்டர் ஐனுல் மரணத்தை குடும்பத்தினர் உறுதி செய்தனர்
September 8, 2026, 9:21 pm
அஜிஸ் ரஹீம் மீது நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது
September 8, 2026, 9:16 pm
