நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளிலிருந்து கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் விடுவிக்கப்பட்டார்

கோலாலம்பூர்:

டிக்டாக்கில் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது ஹில்மன் இதாம் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வழக்கின் முதல் கட்டத்தை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்று தீர்ப்பளித்த மாஜிஸ்திரேட் நூருல் இஸ்ஸா ஹசன் பஸ்ரி, அந்த பெர்சத்து அர்மாடா தலைவரை விடுவித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது டிக்டாக் கணக்கில் பதிவேற்றிய ஒரு அறிக்கை மூலம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், முகமது ஹில்மன் இதாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

குற்றவியல் சட்டத்தின் (சட்டம் 574) பிரிவு 505(பி)-இன் கீழ், மாஜிஸ்திரேட் அமிரா அப்துல் அஜீஸ் முன்னிலையில் முகமது ஹில்மன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

alfah.channel.tv' என்ற டிக்டாக் கணக்கில், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி, பொது ஒழுங்கிற்கு எதிரான குற்றத்தைச் செய்ய எந்தவொரு நபரையும் தூண்டக்கூடிய கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்ட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset