நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு சர்வதேச விமான நிலையம் புகைமூட்டத்தால் பாதிக்கப்படவில்லை

பினாங்கு:

ஜகார்த்தா விமான ரத்துகளுக்குப் பிறகும் பயணிகள் பெருமளவில் சிக்கிக்கொள்ளும் நிலை பினாங்கில்ன்ஏற்படவில்லை.

புகைமூட்டத்தால் பினாங்கு சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

விமானங்கள் வழக்கம்போல் புறப்படுவதும் தரையிறங்குவதும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சமீபத்திய எரிமலைச் செயல்பாடுகள் காரணமாக ஜகார்த்தாவுக்கும் பினாங்குக்கும் இடையிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

இருப்பினும், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சுற்றுலா வளர்ச்சியையும் மேம்பட்ட விமானப் போக்குவரத்து இணைப்பையும் ஊக்குவிக்கும் வகையில், ஹைக்கோ (Haikou), பாட்டம் (Batam) ஆகிய இடங்களுக்குப் புதிய வழித்தடங்களை அறிமுகப்படுத்தி, பினாங்கு தனது சர்வதேச விமானச் சேவை வலையமைப்பை விரிவுபடுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset