நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மின்னணு வர்த்தக விதிகளைக் கடுமையாக்கவும், தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்தவும் அரசு நிறுவனங்கள் இணைந்து செயல்படும்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

மலேசியத் தகவல் தொடர்பு அமைச்சகம், உள்துறை, உள்நாட்டு வர்த்தக அமைச்சகங்கள், காவல்துறை, தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து, மின்னணு வர்த்தக விதிமுறைகளை மேம்படுத்தவும், தடைசெய்யப்பட்ட பொருட்களின் விற்பனையைத் தடுக்கவும் ஒத்துழைத்து வருகிறது என்று அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.

 தற்போதுள்ள குறைபாடுகளை, குறிப்பாக மின்னணு வர்த்தகத் தளங்களுக்கு உரிமம் வழங்கப்படாததை அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், போலி கணக்குகள், சட்டவிரோதப் பொருட்களின் விற்பனைக்கு எதிராக விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஃபென்டானில் போன்ற போதைப்பொருட்களின் இணையவழி விற்பனை குறித்த அதிகரித்து வரும் கவலைகளின் காரணமாக, மின்னணு வர்த்தகத் தளங்களுடன் சமீபத்திய கலந்துரையாடல்கள் தொடங்கப்பட்டதாக அவர் சொன்னார்

இந்தப் போக்குகள் குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மிகவும் கவலை அடைந்ததாகவும் ஃபஹ்மி குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset