நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக்கில் 5 பேர் பயணித்த பறக்கும் மருத்துவர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது 

கூச்சிங்:

விமானி உட்பட ஐந்து பயணிகளை ஏற்றிச் சென்ற BO-105 ரக ஹெலிகாப்டர் ஒன்று, இன்று மாலை சரவாக்கில் உள்ள லாங் லெல்லாங் தரையிறங்கும் துறைமுகம் அருகே விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ஒரு அறிக்கையில் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

மாலை 3.58 மணிக்கு விமானத் தகவல் சேவையிடமிருந்து இந்தச் சம்பவம் குறித்த அறிவிப்பை ஆணையம் பெற்றது.

அந்த ஹெலிகாப்டர் விபத்து நடந்த நேரத்தில் 'பறக்கும் மருத்துவர் சேவையாக இயங்கிக் கொண்டிருந்தது.

2016 ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறைகளின் பகுதிக்கு இணங்க, மலேசியப் போக்குவரத்து அமைச்சின் கீழ் உள்ள விமான விபத்துகள் புலனாய்வுப் பணியகத்தால் இந்தச் சம்பவத்திற்கான காரணம் குறித்த மேலதிக விசாரணை நடத்தப்படும்.

பாதிக்கப்பட்ட அனைவரின் நிலை மற்றும் சம்பவத்திற்கான காரணம் குறித்த மேலதிக தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset