நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்கா மாநிலத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது உட்பட பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்ள நம்பிக்கை கூட்டணி தயாராக உள்ளது: அமிரூடின்

ஷாஆலம்:

மற்றொரு கூட்டணியுடன் ஒத்துழைக்காமல் போட்டியிடும் சாத்தியக்கூறு உட்பட, மலாக்கா மாநிலத் தேர்தலில் பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்ள நம்பிக்கை கூட்டணி  தனது நிர்வாக அமைப்பைத் தீவிரமாகத் தயார்படுத்தி வருகிறது.

மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, நம்பிக்கை கூட்டணி, தேசிய முன்னணி இடையேயான ஒத்துழைப்பு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை.

நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் இயக்குநர் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான எந்தவொரு ஒத்துழைப்பு வடிவத்தையும் தீர்மானிப்பதற்காக, மலாக்கா தேசிய முன்னணி தலைவர்  டத்தோஶ்ரீ அப்துல் ரவுஃப் யூசோவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் இன்னும் நடத்தப்படவில்லை.

மலாக்கா  நம்பிக்கை கூட்டணி பல்வேறு சூழ்நிலைகளுக்குத் தயாராகும்.

அந்த சூழ்நிலைகள் என்பது, ஜொகூர் அல்லது நெகிரி செம்பிலான் போன்ற சூழ்நிலையாக இருந்தாலும் சரி, அல்லது வேறுபட்ட சூழ்நிலையாக இருந்தாலும் சரி என்று சிலாங்கூர் மந்திரி புசாரான அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset