நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செப்டம்பர் 19 என்பது பழம் கனிந்து பழுக்கும் நாள்; பழம் விழுவதற்காக காத்திருக்கிறோம்: அப்துல் ரவுஃப்

அலோர்காஜா:

மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்படும் தேதி குறித்து தொடர்ந்து ஊகித்து வந்தாலும், செப்டம்பர் 19 மலாக்கா மாநிலத் தேர்தலை  நோக்கிய ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

மலக்கா முதலமைச்சர் டத்தோஶ்ரீ அப்துல் ரவுஃப் யூசோ இதனை கூறினார்.

இந்தத் தேதி, தஞ்சோங் பிடாரா சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் 'மக்களுக்கான மக்கள் பிரதிநிதி திட்டத்தின் கடைசி நாளாகும்.

இதன் மூலம், மாநிலம் முழுவதும் மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை ஆழமாக ஆராய்வதற்காக, மாநிலத் தலைமையுடன் இணைந்து அப்துல் ரவுஃப் மேற்கொண்ட களப் பணிகளின் தொடர் நிறைவடைகிறது.

மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான மைல்கல் செப்டம்பர் 19 தானா என்று கேட்கப்பட்டபோது, ​​அந்தத் தேதிக்குப் பிறகு விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று அப்துல் ரவுஃப் சூசகமாகத் தெரிவித்தார்.

மாதத்தின் 19 ஆம் தேதி, பழங்கள் பழுத்திருக்கும், பழங்கள் கீழே விழுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவர்  நகைச்சுவையாகக் கூறினார்.

மேலும், மாநிலச் செயலாளர் டத்தோ சல்ஹா சல்லே,  மாநிலப் பணிகள், பொது வசதிகள், போக்குவரத்துத் துறை செயற்குழு உறுப்பினரும், ஆயர் லிமாவு மாநில சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஹமீத் மைதீன் ஆகியோரும் உடனிருந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset