நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் ரசாக்கின் 3சி எச்சரிக்கைகளை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் நினைவூட்டினார்

கோலாலம்பூர்:

நாட்டிற்கு மூன்று முக்கிய அச்சுறுத்தல்கள் அல்லது 3சி தொடர்பான இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் செய்தியை இளம் தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை நினைவூட்டினார்.

அவரைப் பொறுத்தவரை, அந்த 3 சி அச்சுறுத்தல்கள் கம்யூனிசம், வகுப்புவாதம்,  ஊழல் ஆகும்.

கம்யூனிச அச்சுறுத்தல் இப்போது இல்லை என்றாலும், இனவாத உணர்வுகள் மற்றும் ஊழல் ஆகியவை இன்னும் பெரும் சவால்களாக இருப்பதால், அவற்றைக் கையாள்வதோடு, வெளிநாட்டு சித்தாந்தங்களின் செல்வாக்கிற்கு எதிராகவும் நாடு தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

கோலாலம்பூரில் உள்ள துன் அப்துல் ரசாக் நினைவிடத்தில் நடைபெற்ற துன் அப்துல் ரசாக்கை நினைவுகூர்தல்: தேசத்தின் வளர்ச்சிக்கான சிற்பி என்ற நிகழ்ச்சியில் பேசியபோது,

இனவாதப் பிரச்சினை இன்னும் வலுவாக உள்ளது. அதே நேரத்தில் ஊழல் இங்குள்ள பிரச்சினைகளில் ஒன்றாகவும் இருக்கிறது என்று அவர் கூறினார்.

ஊழல் குறித்த துன் ரசாக்கின் எச்சரிக்கை மிகவும் முக்கியமானது என்று அன்வர் கூறினார்.

குறிப்பாக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நேர்மைக்கு உறுதியளிப்பது எளிது. ஆனால் ஒருவர் பதவியில் அமர்ந்தவுடன் அந்தக் கொள்கை பெரும்பாலும் தளர்ந்துவிடுகிறது என்ற இளைஞர்களுக்கான அவரது செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

இரண்டாவது பிரதமரை நினைவுகூருவது என்பது அவரது வாழ்க்கையையும் பங்களிப்புகளையும் நினைவுகூறுவதோடு மட்டுமல்லாமல், மறைந்த பிரதமரின் கருத்துக்கள், கொள்கைகள், அரசியல் சிந்தனைகள் தொடர்ந்து பொருத்தமானவையாக இருப்பதையும், புதிய தலைமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துவதையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset