செய்திகள் மலேசியா
நீலாயில் 15 வயதுடைய இந்திய சிறுமி தனுஷா சந்திரமோகன் காணாமல் போன சம்பவம்: பொதுமக்களின் உதவியை நாடும் போலிஸ்
நீலாய்:
நெகிரி செம்பிலான், பாந்தாயில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காணாமல் போன 15 வயது சிறுமியைத் தேடும் பணியில் போலிஸ் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளது.
மலேசிய அரச காவல் துறை (PDRM) பொதுமக்கள் உதவியை நாடியுள்ளது.
காணாமல் போன சிறுமி தனுஷா சந்திரமோகன் எனக் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான புகாரை கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி பாந்தாய் காவல் நிலையத்தில் பெறப்பட்டதாக நீலாய் மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்தார்.
ஒழுக்கக் கட்டுப்பாடு தொடர்பான பிரச்சனையால் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுவரை அச்சிறுமியைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
எனவே, இச்சிறுமி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக நிலாய் மாவட்டக் காவல் துறை தலைமை அலுவலகத்தின் (IPD Nilai) கட்டுப்பாட்டு அறையை 06-7904222 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 4:35 pm
பரபரப்பான பணிகளுக்கு மத்தியில் கோமாலி தோட்ட மக்களின் குரல்களை துணையமைச்சர் யுனேஸ்வரன் கேட்டறிந்தார்
September 8, 2026, 4:35 pm
செப்டம்பர் 19 என்பது பழம் கனிந்து பழுக்கும் நாள்; பழம் விழுவதற்காக காத்திருக்கிறோம்: அப்துல் ரவுஃப்
September 8, 2026, 4:33 pm
துன் ரசாக்கின் 3சி எச்சரிக்கைகளை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் நினைவூட்டினார்
September 8, 2026, 2:32 pm
மாற்றாந்தாய் மகள் குளிப்பதை எட்டிப் பார்த்த வளர்ப்பு தந்தை கைது: மூன்று நாட்கள் தடுப்புக் காவல் விதிப்பு
September 8, 2026, 12:43 pm
2/2026 நாட்டின் தலைமை தணிக்கையாளர் அறிக்கை மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டது
September 8, 2026, 12:16 pm
லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம்: ஜொகூர் மாநில வீட்டுவசதி வாரிய தலைவர் மீது 1.6 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு
September 8, 2026, 12:14 pm
