செய்திகள் உலகம்
நேப்பாள வெள்ளப் பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
ரசுவா:
நேப்பாளம், சீனாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,280 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளையில், தேடுதல், மீட்புப் பணிகள் இரண்டாம் வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், 5,620-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.
நேப்பாளத்தின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,
நாட்டில் 1,259 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 5,083 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இன்னும் காணாமல் போனவர்களில் 583 வெளிநாட்டினரும் அடங்குவர்.
இந்த மீட்பு நடவடிக்கைக்காக 21,400-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நேப்பாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்கள், இன்னும் காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களுக்காக அடையாள இறுதிச் சடங்குகளை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2026, 1:01 pm
பாகிஸ்தான் கோயிலில் விநாயகர் சிலைக்கு முஸ்லிம் ஓவியர் வண்ணம் தீட்டிய வீடியோ வைரல்
September 4, 2026, 10:32 am
நேப்பாள வெள்ளப் பலி எண்ணிக்கை 1,280 ஆக உயர்ந்தது: 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்
September 3, 2026, 5:43 pm
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: இதுவரை 16,300 பேர் வரை உயிரிழப்பு
September 2, 2026, 4:25 pm
மலேசியர்கள், இனி தாய்லாந்தில் விசா இல்லாமல் 30 நாள்கள் மட்டுமே தங்க முடியும்: புதிய சட்டம் அமலாகிறது
August 31, 2026, 8:03 pm
Grand Canyon தேசியப் பூங்காவில் வெள்ளம் ஒருவர் மரணம், 15 பேர் காணவில்லை
August 30, 2026, 5:06 pm
தக்காளியால் சிவந்த சாலைகள்: தக்காளிச் சண்டையில் 20,000 பேர்
August 30, 2026, 10:07 am
ஜொகூர் நீரிணையில் முழுமையாக ஆளில்லாக் கப்பல்கள் சுற்றுக்காவலில் ஈடுபடுத்தப்படும்: சிங்கப்பூர் அறிவிப்பு
August 29, 2026, 4:48 pm
நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: கிட்டத்தட்ட 3000 பேர் வரை காணவில்லை
August 29, 2026, 10:55 am
