செய்திகள் மலேசியா
மடானி அமைச்சரவை உறுப்பினர்களிடையே வலுவான ஒத்துழைப்பு உள்ளது: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி
கோலாலம்பூர்:
சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு மாறாக, அமைச்சரவை உறுப்பினர்களிடையேயான உறவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து வலுவாகவே உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
சமூக ஊடகத் தளங்களில் மாறுபட்ட கருத்துகள் சித்தரிக்கப்பட்ட போதிலும், அமைச்சரவை அமைச்சர்களும் அரசாங்க நிர்வாகமும் பொதுக் கருத்தொற்றுமையின் அடிப்படையில் தொடர்ந்து நெருக்கமாகச் செயல்பட்டு வருவதாக அவர் விளக்கமளித்தார்.
இந்த வலுவான ஒற்றுமையே நாட்டின் எதிர்காலத்திற்கான பல்வேறு கொள்கைகளைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்குகிறது என்பதை வலியுறுத்தினார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமத் ஜாஹித் ஹமிடிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து பிரதமரின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஜோகூர் மற்றும் நெகரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பாக்காத்தான் ஹராப்பானை எதிர்த்து போட்டியிட பாரிசான் நேஷனல் எடுத்த முடிவு உட்பட பல்வேறு விவகாரங்களே இந்த கருத்து வேறுபாட்டிற்கு காரணம் என்று அந்த செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 4:35 pm
பரபரப்பான பணிகளுக்கு மத்தியில் கோமாலி தோட்ட மக்களின் குரல்களை துணையமைச்சர் யுனேஸ்வரன் கேட்டறிந்தார்
September 8, 2026, 4:35 pm
செப்டம்பர் 19 என்பது பழம் கனிந்து பழுக்கும் நாள்; பழம் விழுவதற்காக காத்திருக்கிறோம்: அப்துல் ரவுஃப்
September 8, 2026, 4:33 pm
துன் ரசாக்கின் 3சி எச்சரிக்கைகளை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் நினைவூட்டினார்
September 8, 2026, 2:55 pm
நீலாயில் 15 வயதுடைய இந்திய சிறுமி தனுஷா சந்திரமோகன் காணாமல் போன சம்பவம்: பொதுமக்களின் உதவியை நாடும் போலிஸ்
September 8, 2026, 2:32 pm
மாற்றாந்தாய் மகள் குளிப்பதை எட்டிப் பார்த்த வளர்ப்பு தந்தை கைது: மூன்று நாட்கள் தடுப்புக் காவல் விதிப்பு
September 8, 2026, 12:43 pm
2/2026 நாட்டின் தலைமை தணிக்கையாளர் அறிக்கை மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டது
September 8, 2026, 12:16 pm
