நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாற்றாந்தாய் மகள் குளிப்பதை எட்டிப் பார்த்த வளர்ப்பு தந்தை கைது: மூன்று நாட்கள் தடுப்புக் காவல் விதிப்பு 

ஜொகூர் பாரு: 

மாற்றாந்தாய் மகள் குளிப்பதை எட்டிப் பார்த்த 43 வயதுடைய வளர்ப்பு தந்தைக்கு எதிராக மூன்று நாட்கள் தடுப்பு காவல் விதித்து பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது 

பாதிக்கப்பட்ட 22 வயது இளம் பெண் அளித்த புகாரின் பேரில், மாஜிஸ்திரெட்  அய்மி நவ்வர் முஹம்மத் ஒத்மான் இந்த தடுப்புக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் பாரிட் சுலோங்கில் உள்ள தனது வீட்டில் பாதிக்கப்பட்ட பெண் குளித்துக் கொண்டிருந்தபோது, கழிப்பறை கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டுள்ளது.

பின்னர் வெளியே வந்த அப்பெண்ணிடம், அவரது வளர்ப்புத் தந்தை கதவு இடுக்கு வழியாக எட்டிப் பார்த்ததாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

அச்சமயத்தில் குடும்பத்தினரின் அறிவுறுத்தலின் பேரில் அவர் காவல் துறையில் புகார் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

போலிஸ் புகாரைத் தொடர்ந்து  காவல் துறையினர், நேற்று மதியம் 1.10 மணியளவில் ஜாலான் தஞ்சோங் லாபோவில் உள்ள வாகனக் கழுவும் நிலையம் ஒன்றில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்தனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset