செய்திகள் மலேசியா
லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம்: ஜொகூர் மாநில வீட்டுவசதி வாரிய தலைவர் மீது 1.6 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு
ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநில அரசின் வீட்டுவசதி, வீட்டு மனை விண்ணப்பங்களைக் கையாள்வதில் லஞ்சம் கோரியது, பெற்றுக்கொண்டது மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் ஜொகூர் மாநில வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
40 வயதுடைய அந்த சந்தேக நபர், செப்டம்பர் 7ஆம் தேதி மாலை மணி 7.30 சுமாரில் ஜோகூர் ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டார்.
2016ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், சுமார் 400 வீட்டு மனை விண்ணப்பதாரர்களிடம் இருந்து தலா RM4,000 வீதம், மொத்தம் ஏறக்குறைய RM1.6 மில்லியன் தொகையை அவர் லஞ்சமாகக் கோரியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பொய் ரசீதுகளைப் பயன்படுத்தி, அக்குழுவின் வங்கிச் கணக்கில் இருந்து பணத்தை விலக்கிக் கொண்டு, அதனைத் தனது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தொடர்புகொண்டு கேட்டபோது, இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய ஜோகூர் மாநில MACC இயக்குநர் ஹைருசாம் முகமட் அமீன் @ ஹமிம், இவ்காரணமானது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் பிரிவு 16(a)(A), பிரிவு 18 மற்றும் பிரிவு 23 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 4:35 pm
பரபரப்பான பணிகளுக்கு மத்தியில் கோமாலி தோட்ட மக்களின் குரல்களை துணையமைச்சர் யுனேஸ்வரன் கேட்டறிந்தார்
September 8, 2026, 4:35 pm
செப்டம்பர் 19 என்பது பழம் கனிந்து பழுக்கும் நாள்; பழம் விழுவதற்காக காத்திருக்கிறோம்: அப்துல் ரவுஃப்
September 8, 2026, 4:33 pm
துன் ரசாக்கின் 3சி எச்சரிக்கைகளை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் நினைவூட்டினார்
September 8, 2026, 2:55 pm
நீலாயில் 15 வயதுடைய இந்திய சிறுமி தனுஷா சந்திரமோகன் காணாமல் போன சம்பவம்: பொதுமக்களின் உதவியை நாடும் போலிஸ்
September 8, 2026, 2:32 pm
மாற்றாந்தாய் மகள் குளிப்பதை எட்டிப் பார்த்த வளர்ப்பு தந்தை கைது: மூன்று நாட்கள் தடுப்புக் காவல் விதிப்பு
September 8, 2026, 12:43 pm
2/2026 நாட்டின் தலைமை தணிக்கையாளர் அறிக்கை மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்பட்டது
September 8, 2026, 12:14 pm
