நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய வர்த்தகர்களுக்காக 1 பில்லியன் ரிங்கிட் நிதியுடன் அதை நிர்வகிக்க புதிய செயலகத்தை பிரதமர் உருவாக்க வேண்டும்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்

கோலாலம்பூர்:

இந்திய வர்த்தகர்களுக்காக 1 பில்லியன் ரிங்கிட் நிதியுடன் அதை நிர்வகிக்க புதிய செயலகத்தை பிரதமர் உருவாக்க வேண்டும்.

மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் இதனை வலியுறுத்தினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை அண்மையில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

இந்த சந்திப்பில் இந்திய வர்த்தகர்களின்  நலனுக்காக பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் பேசப்பட்டது.


இந்திய சமுதாயத்திற்காக பல்வேறு திட்டங்களை மடானி அரசு செய்து வருகிறது.

குறிப்பாக இந்திய வர்த்தகர்களின் மேம்பாட்டிற்காக நிதிகளையும் ஒதுக்கி வருகிறது.

இந்த நிதிகள், கடனுதவி பல்வேறு வங்கிகள், இலாகாக்களின் கீழ் ஒதுக்கப்படுகிறது.

ஆனால் மைக்கியை பொருத்த வரையில் இந்திய வர்த்தகர்களுக்காக அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்க வேண்டும்.

மேலும் இந்த நிதியை நிர்வகிக்க
புதிய செயலகத்தையும் பிரதமர் உருவாக்க வேண்டும்.

இப்போது கடனுதவி அல்லது உதவிகளை பெற வர்த்தகர்கள் பல அரசு ஏஜன்சிகளை நாட வேண்டியுள்ளது.

இவை அனைத்தும் ஒரே செயலக தளத்தில் அமைத்தால் வர்த்தகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

மைக்கியின் இந்த கோரிக்கை தாம் ஆய்வு செய்வதாக பிரதமர் கூறியதாக மைக்கி செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset