செய்திகள் மலேசியா
மைக்கியின் தொழில் முனைவோர் மாநாடு 2026; அமைச்சர் ஸ்டீவன் சிம் தொடக்கி வைக்கிறார்: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
கோலாலம்பூர்:
மைக்கி தேசிய அளவிலான தொழில் முனைவோர் மாநாடு, முத்ரா பிரச்சார பயணம் 2026 ஆகிய நிகழ்வுகளை மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்துள்ளது.
மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள இந்திய வணிகர்களின் மேம்பாட்டிற்காக மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அவ்வகையில் மைக்கி மாபெரும் அளவில் தொழில் முனைவோர் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாநாடு வரும் செப்டம்பர் 20ஆம் தேதி
காலை 9.00 மணிக்கு மேல் பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ராக்யாட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுகிறது.
தொழில் முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சர் (குஸ்கோப்) ஸ்டீவன் சிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
மைம்கி தொழில் முனைவோர் மாநாடு 2026 என்பது தொழில் முனைவோர், வர்த்தகச் சமூகத்தினர், முகமைகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைத்து, தொழில்முனைவோர் சூழலமைப்பை வலுப்படுத்தவும், தொழில்முனைவோருக்கு அதிக வாய்ப்புகளைத் திறந்து விடவும் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும் என்று அவர் சொன்னார்.
இந்த நிகழ்ச்சி, மலேசியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் முத்ரா பிரச்சார பயணம் 2026 நிகழ்ச்சியின் தொடர்ச்சியாகும.
இதன் மூலம் தொழில் முனைவோரை நேரடியாக அணுகி, தகவல், நிதியுதவி, வர்த்தக ஆதரவு, தொழில்முனைவோர் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான அணுகலை அதிகரிப்பதே நோக்கமாகும்.
இந்த உச்சிநிலை மாநாட்டின் மூலம், பங்கேற்பாளர்கள் தொடர்புடைய முகமைகள் வழங்கும் பல்வேறு முயற்சிகள், வசதிகள் குறித்து அறிந்து கொள்வதுடன், வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கி புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராயவும் முடியும்.
அரசாங்கம், நிதி நிறுவனங்கள், வர்த்தகச் சமூகத்தினருக்கு இடையிலான வலுவான ஒத்துழைப்பு, அதிகமான திறன்மிக்க தொழில்முனைவோரை உருவாக்குவதற்கும், போட்டித்தன்மை மிக்கவர்களாகவும், சவால்களை எதிர்கொள்ளக் கூடியவர்களாகவும் இருந்து உயர்ந்த நிலைக்கு வளர்வதற்கும் முக்கியமானது என மைக்கி நம்புகிறது என்று அவர் சொன்னார்.
ஆக இம்மாநாட்டில் தொழில்முனைவோர்களும் வர்த்தகச் சமூகத்தினரும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மைக்கி துணை தலைவர் டத்தோ ஏ.டி. குமரராஜா, உதவித் தலைவர்கள் திருநாவுக்கரசு உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 21, 2026, 9:27 am
நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர்களின் நியமனத்தை துவாங்கு முஹ்ரிஸ் உடனடியாக ரத்து செய்தார்
September 20, 2026, 8:36 pm
நஜிப் உட்பட ஒவ்வொரு கைதிக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு: பிரதமர்
September 20, 2026, 8:35 pm
நஜிப்பின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துவது கடினம்: ஷாபி
September 20, 2026, 8:34 pm
அமைச்சர் பதவியிலிருந்து விலகல்: ஷாங்காயில் இருந்து திரும்பிய பிறகு அந்தோனி லோக்கை பிரதமர் சந்திக்கிறார்
September 20, 2026, 8:33 pm
ஆசிய விளையாட்டுப் போட்டி: மலேசியாவின் பதக்கக் கணக்கை தேவேந்திரன் தொடங்கினார்
September 20, 2026, 8:32 pm
பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்: டத்தோஸ்ரீ சாரணி
September 20, 2026, 1:22 pm
அம்னோவை எதிர்கொள்ள கூட்டணி அமைப்பதற்காக பெர்சத்து கட்சியை மற்ற கட்சிகள் உளவு பார்க்கின்றன: அஸ்மின்
September 20, 2026, 1:22 pm
